தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் படு பிஸியாக நடித்த வரும் நடிகைகளில் ஒருவர் தான் ராஸ்மிகா. இன்றைய இளைஞர்களின் க்ரஸ் யார் என்று கேட்டால் பட்டு என்று ராஷ்மிகா பெயரைத் தான் அனைவரும் கூறுவார்கள்.
இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் மிகப் பெரிய அளவு வெற்றியை இவருக்கு தந்ததன் மூலம் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது என கூறலாம்.
இதனை அடுத்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். கடைசியாக இவர் தமிழில் வாரிசு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.
நடிக்கும் போதே இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையிலும் அதைப் பற்றி எல்லாம் இவர் கவலைப்படாமல் தொடர்ந்து தனது பணியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தானா வைத்திருக்கும் ஆடம்பர சொகுசு கார்களைப் பற்றியும், அதன் விலை பற்றியும் தற்போது சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.
அந்த வகையில் ராஷ்மிகா மந்தானாவிடம் இருக்கும் சொகுசு கார்கள் என்னென்ன அதன் விலை என்ன என்பதை பார்க்கலாம்.
ராஷ்மிகாவிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் உள்ளது. இதன் விலை சுமார் 1.84 கோடியாக உள்ளது என்பது தெரிந்தால் பலரும் வாய்ப்பிளந்து விடுவார்கள்.
இதனை அடுத்து ஆடி க்யூ 3 காரினை அவர் வைத்திருக்கிறார். இந்த காரின் விலை சுமார் 46 லட்சம் ரூபாயாகும்.
மேலும் இவரிடம் ஹூண்டாய் சேண்ட்ஃபி கார் உள்ளது. இதன் விலை 44 லட்சம் ரூபாய் எவ்வளவு விலை உயர்ந்த கார்களை தான் ராஷ்மிகா வைத்திருக்கிறார் என்பது தற்போது பலருக்கும் தெரிந்து விட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.