படுக்கையில் பெண்ணை திருப்தி படுத்த முடியாதவன் துரோகி..! - இதை செஞ்சா தீர்வு கிடைக்கும்..! வைரமுத்து ஓப்பன் டாக்..!

 

திரைப்பாடல்கள் எழுதுவதில் வல்லவரான கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவின் முன்னணி பாடல் ஆசிரியராக திகழ்கிறார். பாடல் ஆசிரியராக இருப்பதோடு மட்டுமல்லாமல் கவிஞராகவும் கவிதைகளை அள்ளி வழங்கக்கூடிய மிகச்சிறந்த கலைஞராகவும் திகழ்கிறார். 

கவிப்பேரரசு என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த பாடல்களை எழுதுவதில் வல்லவர். இதனை அடுத்து சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சில கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. 

குறிப்பாக இவர் இளம் தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது குறித்தும், அப்படி ஆகிவிட்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஏற்படும் என்பதை பற்றி மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பேசி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் போதை பழக்க வழக்கத்தால் அழிந்து போன பல குடும்பங்களை அவர் பார்த்திருப்பதாகவும் அதனால் அவர்கள் அடைந்த அவமானங்களை பற்றி மிகச் சிறப்பான முறையில் தெரிந்தவராகவும் அவரது பேச்சு இருந்தது. 

மேலும் அவர் பேசும் போது போதை பழக்கத்தால் நாம் நம்மை இழப்போம் என்றும் உங்களை நம்பி ஒரு பெண் உங்களை திருமணம் செய்து கொண்டு மனைவியாகும் போது அவளுக்கு தேவையான உணவு, உடை, தங்கம் போன்றவற்றை மட்டும் கொடுத்தால் போதாது. 

அவள் எதை எதிர்பார்த்து உங்களை திருமணம் செய்து கொண்டால் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கக்கூடிய வேளையில் உங்களால் சரிவர தாம்பத்தியத்தை ஈடுபட முடியாது. இந்த குறைபாட்டால் உங்களுக்குள் பல பிரச்சனைகள் ஏற்படும். 

நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத சில துன்பங்களை இது உங்களுக்கு கொடுக்கும். எனவே உங்களது எதிர்கால திருமண வாழ்வை நினைத்து நீங்கள் அந்த போதை பழக்கத்திலிருந்து உடனடியாக வெளி வருவது தான் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று ஆணித்தரமாக பேசி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் போதைப் பொருட்களை பயன்படுத்தும் போது அதனால் நாட்கள் செல்லச் செல்ல ஒரு ஆணின் வீரிய தன்மையை பாதித்து மனைவியை திருப்தி படுத்த முறை முடியாத நிலைமைக்கு அழைத்துச் செல்லும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். 

எனவே 40, 45 இருக்கும் மனைவியின் ஆசைகளை திருப்தி படுத்த முடியாதவர்களாக நீங்கள் மாறி விடுவீர்கள். எனவே போதைப் பழக்கத்தை நீங்கள் முற்றிலும் ஒழிக்க வேண்டும். 

அது உங்கள் உதட்டோடு உறவாடும் புகையிலை ஆக இருந்தாலும், சரி மதுவாக இருந்தாலும் சரி, சிகரெட் ஆக இருந்தாலும் சரி அதை எதிர்கால சந்ததியை அழிக்க கூடியது என்பதை உணர்ந்து கொண்டால் நீங்கள் வெகு விரைவில் போதை பழக்கத்தில் இருந்து வெளிவருவீர்கள் என வைரமுத்து ஓப்பனாக பேசி இருப்பதில் பல உண்மைகள் உள்ளது என்று பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.