அட்ஜஸ்ட்மெண்டுக்கு நோ சொன்னதால் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஹீரோயின்..! - அட இதுதான் காரணமா?

 

அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தைக்கும் சினிமாவிற்கும் அதிக தொடர்பு உள்ளது என்று கூறலாம். அந்த வகையில் பிரபல நடிகர் படத்தில் ஒரு இளம் நடிகை நடிக்க கமிட் ஆகும் விஷயம் புதிதான ஒன்று இல்லை. ஆனாலும் அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் காரணமாக அந்த படத்தை விட்டு தற்போது வெளியேறி இருக்க கூடிய விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக அந்த நடிகரின் மீது அதீத பற்று கொண்ட அந்த நடிகை அவர் படத்தில் நடிப்பதை கனவாகக் கொண்டிருந்தார். எனவேதான் சம்பளம் ஏதும் பேசாமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எனினும் இயக்குனரின் உறவினர் ஒருவர் பார்த்த வேலை காரணமாகத்தான் இந்த நடிகை அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது. 

ஏற்கனவே இந்த இயக்குனரின் உறவினர் திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சுலர் என்ற பெயரில் பல நடிகைகளோடு உல்லாசமாக சுற்றித்திரிவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அது மட்டும் அல்லாமல் பல நடிகைகளோடு உறவு வைத்துக் கொண்டு இருப்பதாக ஷாக்கிங் புகார்களும் அவர் மீது உள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகரை வைத்து தனது உறவினர் இயக்கும் படத்தில் இந்த இளம் நடிகை ஒப்பந்தம் ஆனது தெரிந்தும் அந்த நடிகைக்கே நூல் விட, இவர் நடிகையிடம் அசிங்கமாக திட்டு வாங்கி முடியாது என்ற பேச்சைக் கேட்ட பிறகு பிடிவாதமாக வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அந்த இயக்குனரிடம் பேசிய பேச்சு கோடம்பாக்கத்தை உலுக்கி விட்டது. 

பார்க்க படு டம்மி பீஸாக இருந்தாலும் பெண்களின் விசயத்தில் அந்த ஆள் படுமோசம். இவரது டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அந்த இளம் ஹீரோயின் தற்போது அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தெரியவந்துள்ளது. 

எனவே இந்தப் படத்தில் இனிமேல் அந்த இளம் நடிகை நடிக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இவரைப் போன்ற ஜென்மங்கள் இருக்கும் வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். இது போன்ற சம்பவங்களை யார் தடுத்து நிறுத்துவார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.