விஜய் டிவி என்றாலே பிரம்மாண்டம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். பல ரியாலிட்டி ஷோர்களை நடத்துவதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவி தான் என்று கூறவேண்டும்.
அந்த வகையில் விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு அற்புதமான எதிர்காலம் அமைந்துவிட்டது.
இந்த பாட்டு பாடுவதை கேட்டு அவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்த இசையமைப்பாளர் தமன் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.
இசைத்துறைக்கு மிகப்பெரிய அளப்பரிய சேவையை செய்து வரும் விஜய் டிவி திறமை உள்ள பாடகர்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வகையில் சிறு குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் பாட்டு நிகழ்ச்சி 8 சீசன்களை தாண்டி தற்போது ஒன்பதாவது சீசனையும் பார்த்து விட்டது.
பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறுவர்கள் தங்களது திறமைகளை போட்டி போட்டு ஒவ்வொரு எபிசோடிலும் காட்டி இருந்தார்கள்.
அந்த வகையில் கலர் வெடி கோகுல் தனது அண்ணன் சரவெடி சரவணன் எழுதிய கானா பாடலை பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து கானாவில் எதிர்காலத்தை நினைத்து வாழ்ந்து வரும் கலர் வெடி கோகுலுக்கு, இசை அமைப்பாளர் தமன் ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
மேலும் கலர் வெடி கோகுலை விமானத்தில் ஹைதராபாத்துக்கு அழைத்து சென்று ஒரு படத்திற்கான வாய்ஸ் டெஸ்ட் எடுத்துள்ளார். மேலும் கலர் வெடி கோகுலுக்கு முதல் சம்பளத்தையும் தந்து அசத்தி விட்டார்.
கலர் வெடி கோகுல் பாடப்போகும் பாடல், படம் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் விவரங்கள் இனிவரும் வார நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என தெரிகிறது.
இந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் இருக்கும் பலர் மத்தியில் இசையமைப்பாளர் தமன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதைக் குறித்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டு இருக்கிறார்கள்.