டிவி சீரியல்களில் சக்கை போடு போட்டு ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் பெரும்பாலும் ஈர்த்து வைத்திருக்கும் தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி என்று பச்சை குழந்தையும் பக்குவமாய் சொல்லிவிடும்.
அந்த வகையில் சன் தொலைக்காட்சியை அடித்துக் கொள்ள எந்த சீரியலும் இல்லை. எந்த தொலைக்காட்சியும் இல்லை என்று கூறக்கூடிய அளவு தான் ஒவ்வொரு சீரியலில் தரம் கதை போன்றவை உள்ளது.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஏறக்குறைய 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, சாய்ங்கால வேளையில் டீயை குடித்துவிட்டு குடும்பஸ்திரிகள் அமர்ந்து விட்டால் இரவு 11 மணி வரை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
மேலும் இடைவேளையில் மட்டும் தான் மற்றவற்றை கவனிக்கிறார்கள் என்று கூறலாம்.
அந்த வகையில் கயல், ஆனந்த ராகம், சுந்தரி மற்றும் எதிர் நீச்சல் போன்ற சீரியல்கள் டிஆர்பி ரேட்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்ற வேளையில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இறந்ததின் காரணமாக மிகப்பெரிய சருக்களை சந்தித்துள்ளது.
இதனை அடுத்து எந்த சாருக்களில் இருந்து மீண்டு எழ சன் டிவி ஒரு புது வியூகத்தை வகுத்து விட்டது. இனி எதிர்நீச்சலை நம்பினால் பலன் இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட சன் டிவி பூவா தலையா என்ற புதிய சீரியலை களம் இறக்க உள்ளது.
இந்த சீரியல் வழக்கம் போல் கிராமத்து கதை போல இல்லாமல் நாம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இருப்பதால் எதிர்நீச்சல் போலவே இதுவும் டிஆர்பி ரேட்டில் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
எனவே இந்த சீரியல் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை அடுத்து தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலைக்கு செல்லுமா என்பது தெரியவரும்.