காலம் கலிகாலம் என்பதை ஒவ்வொரு நிகழ்வுகளும் தற்போது உணர்த்தி வருகிறது. அந்த வகையில் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் விஜயகுமார் பற்றி உங்களுக்கு அதிகம் பகிர வேண்டாம். இவரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார் பற்றி உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
தமிழ் திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமாகி சில படங்களில் நடித்த பிறகு நடிப்பில் இருந்து விலகியவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் நடிப்பில் கிடைக்காத பேரும், பிரபலமும் இவருக்கு கிடைத்தது என கூறலாம்.
பிக் பாஸ் வீட்டில் இவர் அடித்த ரகளை இன்று வரை பேசும் பொருளாகவே உள்ளது. இதனை அடுத்து இவரது மகள் ஜோவிகாவை தற்போது நிகழும் பிக் பாஸ் சீசன் 7 போட்டி ஆளராக களம் இறக்கி இருக்கும் வனிதா ஒரு தாயைப் போல நடந்து கொள்ள தவறிவிட்டார் என கூறலாம்.
பெற்ற பிள்ளைக்கு எதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கணக்கு தெரியாமல் இவர் இருப்பதால்தான் இவர் வாழ்க்கை இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை ரசிகர்கள் தற்போது பேசி வருவதோடு, பெற்றால் மட்டும் தாயாகி விட முடியுமா? என்ற கருத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள்.
இதற்குக் காரணம் இவர் தனது மகள் ஜோதிகாவிடம் பாய் ப்ரெண்ட் வைத்துக்கொள்ள கூறி இருக்கிறார். அதற்கான ரீசன் என்ன என்று பார்க்கும் போது ஜோவிகா பள்ளிக்கு ஆட்டோவில் தான் சென்று வருகிறார்.
பாய் பிரண்டு இருந்தால் பிக்கப் செய்யவும், டிராப் செய்யவும் யூஸ்ஃபுல்லாக இருக்கும் என அந்த விஷயத்திற்கு தான் ஜோவிகாவிடம் தாயாரான வனிதா பாய் பிரண்டு வைத்து கொள்ள கூறி இருப்பது தான் தற்போது பேசும் பொருளாகி விட்டது.
மேலும் அதற்கு ஜோவிகா வேண்டாம் என்று தெரிவித்து விட்டார் என அண்மை பேட்டியில் வனிதா பேசி மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை எடுத்து இப்படி ஒரு தாய் இருந்தால் வெளங்குமா? என்று ரசிகர்கள் பல்வேறு வகைகளில் நக்கலாகவும், இடித்தும் பேசி இருக்கிறார்கள்.
உங்களுக்கு எந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்க கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.