அட..ச்சீ.. விமானத்திலுமா? மது போதையில் அத்துமீறல்..! பிரபல நடிகை பகீர் தகவல்..!

 

நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில் அறிவியலில் உன்னதமான வளர்ச்சியை அடைந்திருக்கும் நாம், பெண்கள் விஷயத்தை பொறுத்தவரை இன்னும் சரியான வகையில் வளரவில்லை என்று கூறலாம். 

நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து, பாலியல் வன்கொடுமைகள் இன்றும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. இது சாதாரண பெண்கள் முதல் செலிபிரேட்டியாக இருக்கக்கூடிய பெண்கள் வரை தொடரும் தொடர்கதையாக மாறிவிட்டது என கூற கூடிய வகையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அந்த வகையில் மலையாள பிரபல நடிகையான திவ்யா பிரபா தமிழில் கயல், கோடியில் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய விடக்கூடிய வகையில் தனக்கு விமான நிலையத்தில் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி இருப்பதோடு அதற்கான வழக்கையும் பதிவு செய்திருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். 

இதற்குக் காரணம் இவர் மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலமாக கொச்சி திரும்பி வந்த போது 12 சி இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குடிபோதையில் தன் அருகே அமர்ந்த காரணத்தால், காரணம் இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறியிருக்கிறார். 

இது குறித்து விமானத்தில் இருந்த பணி பெண்ணிடம் புகார் தெரிவித்த போது அவர் எனது இடத்தை மாற்றி கொடுத்தாரே தவிர, எனக்கு தொல்லை கொடுத்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். 

அத்தோடு கேரளா போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார் கொடுத்ததோடு, விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பதோடு அந்த குற்றவாளிக்கு உரிய தண்டனையும் கிடைக்க வேண்டும் என தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். 

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பதோடு அந்த நபருக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.