"அவரு தாங்க தொழில் கத்து கொடுத்த குரு..” - சிவகார்த்திகேயனை கலாய்க்கும் பிரபலம்..!

 

திரை உலகில் மிக முக்கியமான பேசும் பொருளாக தற்போது இசையமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையே நடக்கக்கூடிய மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பக்கூடிய விஷயம் தான் ட்ரெண்டிங்காக உள்ளது. 

இதற்கு காரணம் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் தனக்கு செய்து விட்டதாக இமான் கூறி இருக்கக்கூடிய பேச்சு பரவலாக சிவகார்த்திகேயனின் இமேஜை டேமேஜ் செய்வது போல் அமைந்துவிட்டது. 

மேலும் இந்த விஷயத்தை பற்றி இரு தரப்பு என வெவ்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்ற வேளையில் இது பற்றி சிவகார்த்திகேயன் மூச்சு விடாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சூழ்நிலையை பலரும் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகின்ற வேளையில் சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவியோடு தகாத உறவு இருந்ததாக ப்ளூ சட்டை மாறன் பற்ற வைத்திருக்கும் தீ சிவகார்த்திகேயனை மட்டுமல்லாமல் தனுஷை வம்புக்கு இழுத்துள்ளது. 

இதனை அடுத்து நம்ம எதிரி வசமா சிக்கி கிட்டான்.. நம்ம பொழச்சிட்டோம் என்கிற ரீதியில் தனுஷ் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கும் போஸ்ட் தனுசை கழுவி ஊற்றும் வகையில் உள்ளது என கூறலாம். 

அதுமட்டுமல்லாமல் தனுஷ் தான் தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குரு என ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்க கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல இது போன்ற பலான வேளையை கற்றுக் கொடுத்ததும் தனுஷ் தான் என்ற பகீர் தகவலை கூறியிருக்கிறார். 

 மேலும் நடிகர் சிவகார்த்திகேயனை குறித்து இசையமைப்பாளர் இமான் பேசியது போல இதுவரை எந்த ஒரு பிரபலங்களும் தனுஷ் பற்றியும் அவரது கேரக்டர் பற்றியும் வெளிப்படையாக பேசாத நிலையில் அவர் தப்பித்து விட்டார் என பல சினிமா பிரபலங்கள் கூறியுள்ளது. 

அது மட்டுமல்லாமல் தனுஷை ப்ளூ சட்டை மாறன் வைத்து செய்திருக்கிறார் என்று கூறும் அளவிற்கு அவர் கழுவி ஊற்றி இருக்கிறார். இதையெல்லாம் படித்து வரும் ரசிகர்கள் அனைவரும் எதில் உண்மை உள்ளது என்று தெரியாமல் தற்போது திணறி வருகிறார்கள். 

இந்த விஷயத்திற்கு சிவகார்த்திகேயன் வாய் திறந்து பதில் அளிக்கும் வரை அவரது கேரியரை டேமேஜ் செய்யக்கூடிய வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துவிடும். 

எனவே இனியும் மௌனம் சாதிக்காமல் உடனடியாக களம் இறங்கி இதுபோன்ற விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகார்த்திகேயன் முற்படுவாரா? அல்லது தினமும் இணையத்தில் விஷயங்களை வைரலாக தெறிக்க விட துணை போவாரா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.