தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடித்தவர், வளர்ந்து பெரிய ஆளாக மாறிய பின் வந்த கதாநாயகி வாய்ப்புக்களை தவற விட்டதின் காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த குழந்தை நட்சத்திரம் பிரபுதேவா உடன் அள்ளித்தந்த வானம் படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர். இதனை அடுத்து ஜெயம் ரவி நடித்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
தனது திறமையான நடிப்புத்திறனை இந்த படத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரமணா, இன்பா, கத்தி கப்பல், இளம் புயல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து வளர்ந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடிக்க மறுத்து விட்டு சின்ன திரையில் வீஜேவாக பணிபுரிந்தார்.
மேலும் இவர் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற விஜய் டிவி மற்றும் ஜி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார்.
இந்த நடிகை தனது எட்டு வயதில் இருந்தே அந்தரங்க டார்ச்சனுக்கு உள்ளானதாகவும், மியூசிக் டைரக்டர் ஒருவர் இவரை தவறாக அணுகியதாகவும் தூங்கிக் கொண்டிருந்தபோது பல சில்மிஷங்களை தன்னிடம் செய்ததாகவும் தற்போது தெரிவித்திருக்கிறார்.
மேலும் தனது தாயாரின் நெருங்கிய நண்பராக இவர் தன் அம்மா இருக்கும்போது பாசமாக பழகும் தன்னைக் கொண்டு இருந்தவர்.ஆனால் அம்மா இல்லாத நேரத்தில் தன்னிடம் தவறுகளாக நடக்க அங்கும், இங்கும் கை வைப்பார்.
இதனை தன் தாயிடம் கூறினால் வருத்தப்படுவாள் என்று அவள் இறக்கும் வரை இதை சொல்லவே இல்லை.
மேலும் கதாநாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து அந்த வாய்ப்பே வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என்று நடிகை கல்யாணி கூறியிருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து சேர்ந்த மருத்துவரான ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது சின்னத்திரையில் நடிப்பதையும் தவிர்த்து விட்டார் பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.
சிறுவயதில் பட்ட துன்பங்களை இது வரை சொல்லாத நடிகை கல்யாணி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய காரணத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டார்கள்.