திரையுலகில் நேற்றும், இன்றும், என்றுமே ஹீரோயின்களுக்கு என்று தனி மவுஸ் இருந்துள்ளது என கூறலாம். அந்த வகையில் நடிகையர் திலகம் என்ற பட்டத்தை பெற்ற சாவித்திரியைப் போல லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருக்கும் நயன்தாரா பற்றி உங்களிடம் அதிகமாக சொல்ல வேண்டாம்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து விட்டார். தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பிள்ளையார் சொல்லி போட்டிருக்கிறார்.
நடிக்கும் காலத்திலிருந்தே பல வகையான கிசுகிசுகளுக்கு ஆளான இவர் யாரை திருமணம் செய்து கொள்வார்.. அட.. அவரை திருமணம் செய்து கொள்வார் என்ற பேச்சுக்கள் நிலவி வந்த சமயத்தில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார்.
திருமணம் செய்து தாயாகி விட்ட நிலையில், இன்னும் ஹீரோயினியாக கலக்கி வருகிறார் என்பதற்கு ஜவான் படமே சாட்சியாக உள்ளது என கூறலாம். இதனை அடுத்து சமீபத்தில் இவர் விடாமுயற்சி என்ற அஜித் படத்திலிருந்து விலகினார்.
இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்த படத்திலும் இருந்து விலகி தனியாளாக தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புறப்பட்டு விட்டார்.
பல ஹீரோக்களுக்கு மத்தியில் சிங்கிளாக நின்று பல கோடிக்கணக்கில் நயன் தந்திருக்கிறார்.
அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் வெளி வந்த கோலமாவு கோகிலா படத்தில் இவர் முதல் நாளில் 3.47 கோடியை வாரி அளித்தார்.
இதனை அடுத்து சோலோவாக மாயா திரைப்படத்தில் களம் இறங்கி முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரெண்டு கோடி லாபத்தை பெற்றதோடு, அறம் படத்தில் 1.58 கோடியை முதல் நாளில் பெற்றுக் கொடுத்தார்.
மேலும் இவர் கடந்தாண்டு வெளி வந்த கனெக்ட் படத்தின் மூலம் 1.2 கோடி லாபத்தை பெற்று தந்திருக்கிறார். இப்படி தனியாக நடித்து கோடிகளை லாபத்தை பெற்றுக் கொடுத்த நயன்தாரா, ஜவான் படத்திற்கு பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்க கவனத்தை செலுத்தி வருகிறார் என கூறலாம்.
எனவே இனிவரும் காலங்களில் நயன்தாரா தனது சோலோ பர்பாமென்ஸில் தரமான படங்களை கட்டாயம் தருவார் என நம்பலாம்.