திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கக்கூடிய நடிகைகள் பலர் இருக்கிறார்கள் அந்த வகையில் பல படங்களில் கவர்ச்சியான நடிப்பால் பெயரைப் பெற்றவர்தான் நடிகை சோனா.
தற்போது நடிகை சோனா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து ஸ்மோக் என்ற ஒரு வெப் சீரியலை இயக்கி வருகிறார்.
இந்த சீரியல் முழுமையும் இவர் தெரியரில் சந்தித்த வலிகள், பிரச்சனைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டுதான் கதை நகரும் என கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து அண்மையில் இவர் ஒரு பிரஸ் மீட்டில் பேசிய போது பலவிதமான கேள்விகள் இவர் மத்தியில் எழுப்பப்பட்டது. அதில் ஒன்று தான் ஏன் இன்னும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி.
இந்த கேள்விக்கு அவர் பதில் அளித்த போது கவர்ச்சி நடிகை என என எல்லோரும் அழைத்தார்கள் என்பதால் தான் எனக்கு திருமணம் ஆகவில்லை. சினிமாவில் நடித்தால் அப்படித்தான் இருப்பாள் என நினைத்து விட்டார்கள் என தனது சோகத்தை பகிர்ந்து இருக்கிறார்.
இயல்பாகவே சினிமா துறையில் பணியாற்றும் பெண்கள் மீது ஒரு விதமான தவறான அபிப்ராயம் பலருக்கும் உள்ளது. ஆனால் அதுவும் ஒரு துறை தான் என்பதை புரிந்து கொள்ளக் கூடிய சமயத்தில் தான் இவர்களைப் போன்ற பெண்களுக்கு திருமணம் என்பது விரைவில் நடக்கும் என கூறலாம்.
உங்களுக்கு எந்த பதிவு பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்தை மறக்காமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.