ஒரு நாடு, ஒரே தேர்தல் என்று பேசி வரக்கூடிய காலகட்டத்தில் காவிரி நீரை நமக்கு பங்கிட்டு கொடுப்பதில் பலவிதமான பிரச்சனைகளை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. மேலும் கன்னடர்கள் தமிழர்களுக்கு நீர் கொடுக்க தயங்கி வருவதோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் பிரபல நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சில சமூக கருத்துக்களை வெளிப்படையாக மிக தைரியமாக கூறக்கூடிய நடிகர்களில் மிக முக்கியமான ஒருவராக திகழ்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் காவிரி விவகாரம் குறித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் காவேரி விவகாரம் பற்றி மிகத் தெளிவான வகையில் பேசி இருக்கிறார்.
அப்போது அவர் ஒரு ஹெலிகாப்டரில் கர்நாடகாவிற்கு சென்று பாருங்கள் அங்கு இருக்கும் அணைகள் எப்படி உள்ளது என்று.
அதுமட்டுமா? அணைகளில் நீர் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது நமக்கு அதன் மூலம் எளிதில் தெரிந்து விடும். இப்படி நீர் அதிகம் இருந்தும் நமக்கு தருவதற்கு தயங்கக்கூடிய ஒரு மாநில அரசை தட்டிக் கேட்க முடியாத மத்திய அரசு ஒரு நாடு, ஒரே வெங்காயம் என பேசுவது எந்த வகையில் நியாயம் என கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த காலத்தில் இந்த காவிரி விவகாரம் தீரும் காவிரி விவகாரத்தை அரசியல் ஆக்காமல் விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய வகையில் தீர்வு கிடைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.