இந்திய இளைஞர்களின் க்ரிஷ் என்று பல இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படக்கூடிய கதாநாயகிகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தானா இளைஞர்களின் கனவு கன்னி என்று கூறலாம்.
இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் படை இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அடி எடுத்து கலக்கி வரக்கூடிய இவர் அண்மையில் ஹிந்தியில் ரன்பீர் கபூர் ரோடு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் தளபதி விஜய் ஒரு வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற திரைப்பட பாடலுக்கு ஆடிய விதத்தைப் பார்த்து தமிழகமே ஆடிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு தனது நடனத் திறமையை இதில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
அனிமல் படத்தை பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் இவருக்கு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
ஏற்கனவே தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கும் இவர் தற்போது தான் டிராவல் செய்வதை மிஸ் செய்து விட்டதாக தன்னுடைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் டிராவல் செய்வதின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கக்கூடிய இவர் உங்கள் சொந்த ஊருக்கோ, நண்பர்களின் வீட்டுக்கோ அல்லது உங்கள் கனவு இடத்திற்கோ, குடும்பத்தோடு அல்லது தனியாகவோ போக வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் டிராவல் செய்வதின் மூலம் உங்கள் மனம் ஒரு நிலை பெறும். அங்கு இருக்கும் உணவு கலாச்சாரம், வாழ்க்கை முறை போன்றவற்றை சிறப்பான முறையில் அறிந்து கொள்ள முடியும்.
I miss travelling so much.
Just a lil thing about travelling guys-
Anytime you get sometime na make sure you travel.. anywhere, like -
To your home town or to your friends homes or your dream destination or anywhere with family or alone.. anything but somewhere safe.. cz travelling just opens up your knowledge and mind like nothing else.. different foods, cultures, religions, life styles.. it’s amazing..
I wish all of you get to travel.. ❤️❤️
எனவே அனைவரும் டிராவல் செய்வது அவசியம் என டிராவலின் முக்கியத்தை ராஷ்மிகா மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.
எனவே நேரம் கிடைக்கும் போது நீங்களும் டிராவல் செய்ய முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் மன அழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் புதிய அனுபவம் புத்துணர்வு போன்றவை எளிதில் ஏற்படும் எனக் கூறலாம்.
ராஷ்மிகாவின் இந்த அற்புதமான பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருப்பதோடு நீங்களும் விரைவில் டிராவல் செய்யக்கூடிய வாய்ப்பு அமையும் என்பதை கூறியிருக்கிறார்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்கள் எங்கள் பக்கத்திற்கு உங்களது கருத்துக்களை கூறுவதோடு மேலான ஆதரவையும் கொடுங்கள்.