"சென்னைக்கு இடமாறும் அமீர்கான்..!" - காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

 


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக இருக்கும் அமீர் கான் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்காக சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். மேலும் வட நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து குடியேற அவர் திட்டமிட்டு வருவதாக பல்வேறு வகையான செய்திகள் தற்போது இணையத்தில் வலையம் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு உண்மையான காரணம் என்ன என்று கண்டுபிடித்ததில் கடந்த ஆண்டு அமீர் கானின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார் இதனை அடுத்து அவருக்கு மேல் சிகிச்சைகள் தேவைப்படும் என்ற நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

 எனவே தன் தாயாரின் உடல் நிலையை உடனிருந்து மருத்துவமனையில் கவனித்துக் கொள்ள அமீர் கான் முடிவு செய்து இருப்பதாகவும் அதற்காக சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. 

தன் தாயை கவனித்துக் கொள்ள மிகச்சிறந்த நடிகரான இவர் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்காகவும் திரை உலகில் இருந்து சிறிது காலம் தற்கால ஓய்வினை எடுத்துக்கொண்டு அருகில் இருந்தே அவரது அன்னையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள். 

மேலும் சில ரசிகர்கள் தனது தாய்க்காக உருகும் அமீர் தானே பார்த்து தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற சொல்லுக்கு இவர் முன் உதாரணமாக திகழ்வதாக கூறி வருகிறார்கள். எனவே சிகிச்சையில் இருக்கும் இவரது தாயார் உடல் நலம் மேம்பட்டு சிறப்பாக இருக்க இறைவனிடம் நாம் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.