இந்த உலகில் ஒரே மாதிரியாக ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த சம்பவத்தை தற்போது உண்மையாகவது போல ஒருவரை போல மற்றொருவர் இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை பார்க்கும் போது ராஷ்மிகா மந்தானாவின் ஜெராக்ஸ் போல காட்சி அளித்திருப்பதால் இந்த போட்டோஸ் அனைத்தும் சமூக வலைதளங்களில் படுவேகமாக பரவி ரசிகர்களின் வாய் அடைத்துப் போகக் கூடிய அளவு பிரபலமாகிவிட்டது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இந்த போட்டோ மாப்பிங்காக இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது மாப்பிங்கின் மூலம் செய்யப்பட்ட புகைப்படம் இல்லை என்பதை அறிந்து கொண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.
கன்னட திரைகளில் ஆரம்ப நாட்களில் நடிகையாக அறிமுகமான இவர் தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு மட்டுமல்லாமல், தற்போது பாலிவுட்லும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
2 k இளைஞர்களின் கிரஷ் நடிகையான இவர் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக இருக்கிறார்.
மேலும் தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்து நல்ல பெயரை பெற்றார். இதனை அடுத்து தளபதி விஜய்யோடு ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் கலக்கி இருப்பார்.
மேலும் தற்போது பாலிவுட் படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அண்மையில் இந்த படத்தின் டீசர் வெளி வந்து மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் இந்த போட்டோஸானது இணையத்தில் அதிகமாக பார்க்கப்படக்கூடிய போட்டோக்களில் ஒன்றாக உள்ளது .
மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வைரலாக்கி விட்டார்கள். மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களையும் கொடுத்திருக்கிறார்கள்.