போடுடா வெடிய..கமல்ஹாசனுடன் மீண்டும் இணையும் பிரபல இசையமைப்பாளர்..!

 


உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகி இருக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். மேலும் தற்போது இவர் இந்தியன் இரண்டு படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருப்பதால் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வருகிறார். 

இந்த சூழ்நிலையில் தற்போது பிக் பாஸ் 7 சீசன் ஆரம்பிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருவதால் மிக டைட்டான ஷெட்யூடில் கமல் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். 

பொதுவாகவே கமலின் படங்களில் பாடல்களுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் மெல்லிசை பாடல்கள் என்றால் உங்களுக்கு ஞாபகம் வரக் கூடிய இசை அமைப்பாளர் யார்? இன்றைய காலகட்டத்தில் நமது நெஞ்சை வருடக்கூடிய அந்த இசை அமைப்புக்கு சொந்தக்காரராக ஹாரிஸ் ஜெயராஜ் இருக்கிறார். 

 இவர் இசை அமைத்த பல பாடல்கள் என்றும் டூ கே கிட்ஸ் லைக் செய்யக் கூடிய வகையில் உள்ளது என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே கமலஹாசனின் படங்களுக்கு இசையமைத்திருக்கக்கூடிய இவர் தற்போது KH 233 படத்தில் இசை அமைக்க கூடிய விஷயத்தை அறிந்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

இந்த KH 233 படத்தில் கமலஹாசன் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் இந்தப் படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்க உள்ள செய்தி, மீண்டும் இவர்களது வெற்றி கூட்டணியில் பாடல்கள் ஹிட் ஆவதோடு மட்டுமல்லாமல் படமும் செம ஹிட் ஆகும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.