தளபதி விஜயின் ஆரம்ப நாட்கள் படங்கள் பற்றி உங்களுக்கு அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவருடன் ஜோடியாக நடிகை சங்கவி நடித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தளபதியோடு அதிக அளவு படங்களில் நடித்த இவர் "கோயமுத்தூர் மாப்பிள்ளை" படத்தில் நடித்த போது ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் நடிகை சங்கவி தல அஜித் நடிப்பில் வெளிவந்த அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து விஜயோடு "ரசிகன்" படத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
90-களில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட கனவு கன்னியாக திகழ்ந்த இவர் விஜயுடன் ஜோடி போட்டுக்கொண்டு விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா உள்ளிட்ட படங்களில் அதீத ரொமான்டிக் காட்சிகளில் நடித்து அசத்து இருப்பார்.
தற்போது திருமணம் செய்து கொண்டு பிள்ளை, குட்டி என்று செட்டிலாகி விட்ட இவர் அண்மையில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த விஷயமானது கோயமுத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தில் ஒரு தேதி பார்த்தால் என்ற பாடலில் ஒரு நெருப்பு காட்சி இடம் பெற்றிருக்கும்.
நெருப்பு பற்றி எரிகின்ற போது விஜய் எனது தாவணியை பிடித்து இழுக்கும் போது நான் அவரை அறைந்து விடுவது போல காட்சியை படப்பிடிக்க வேண்டி இருந்தது.
இந்த காட்சி பல கேக்குகள் எடுத்தார்கள். எனினும் அது சரியாக வராத காரணத்தால் எனது தாவணியில் சிறிதும் மண்ணெண்யை ஊற்றி உண்மையாகவே பற்றவைத்து அந்த காட்சியை படம் பிடிக்க நினைத்தார்கள்.
அப்படி படம் பிடிக்கப்பட்ட சமயத்தில் எனது தாவணியில் நெருப்பு பற்றிக் கொண்டு இருந்தபோது, விஜய் அதை இழுக்காமல் இருந்த சமயத்தில் நான் அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அடித்துவிட்டேன். அந்த அறையை நினைத்தால் காதில் இருந்து குய்.. என்ற சத்தம் இன்றும் வருவதாக அவர் கூறி கேள்வி பட்டுள்ளேன் என அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அரைவாங்கி இந்த அளவுக்கு முன்னுக்கு வந்த நடிகர் எவராகத்தான் இருப்பார என்று கூறி கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த செய்தி பிடித்திருந்தால் நீங்கள் படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யலாம்.