நடிகர் சித்தார்த் ஆரம்ப நாட்களில் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இதனை அடுத்து பைவ் ஸ்டார் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். சிறந்த நடிப்பை பார்த்து மேலும் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகமாக உள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த சித்தா திரைப்படம் மிகச்சிறப்பான திரைப்படமாக உள்ளது என்று கமலஹாசன் அவரது நடிப்பை பாராட்டி இருப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கலாம்.
அந்த வகையில் நடிகர் சித்தார்த் இந்த படத்தை பிரமோஷன் செய்ய பல விஷயங்களை செய்து அசத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடித்த இவரது நடிப்புக்கு சிறந்த பாராட்டுக்கள் பலர் மத்தியில் இருந்து கிடைத்து வருகிறது.
இதற்காக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கூடி நடித்து பிரமோஷன் செய்திருக்கிறார். இந்த நிலையில் இவர் சென்னையில் உள்ள பிரபலமான இஜிஏ தியேட்டருக்கு நேற்று வந்திருந்தார்.
இந்த தியேட்டருக்கு அவர் தனியாக வரவில்லை இவருடன் நடிகை அதிதி ராவும் இணைந்து வந்திருந்தார். ஏற்கனவே இவரோடு அதிதி ராவை சேர்த்து கிசுகிசுக்கள் பரவலாக பேசப்படும் வேளையில் இவர்கள் இருவரும் இணைந்து வந்திருந்ததை பார்த்து அனைவரும் கேள் பிரண்டோடு சித்தார்த் தியேட்டருக்கு வந்திருந்தார் என்று கூறி இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இருக்கக் கூடிய இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.