இவரு தான் அடுத்த முதல்வராம்..! - நடிகர் விஜய்-யை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்..!

 

திண்னை எப்போது காலியாகும், அண்ணன் எப்போது வருவார்.. என்று பலரும் இவர் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார்களோ, இல்லையோ, அடிக்கடி இது போன்ற வேலைகளை செய்து ட்ரெண்டிங் ஆவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 


தான் உண்டு தன் வேலை உண்டு என நடிப்பில் மட்டும் தீவிர கவனத்தை செலுத்தி வரும் இவர் தன்னை அரசியல் பயணத்திற்கு முன்னேற்பாடுகளை செய்து அதற்குரிய அஸ்திவாரத்தை போட்டு வருகிறார் என்று சமீப காலமாக அரசில் புரசலாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இதை அடுத்து விஜய் விரைவில் அரசியலில் தடம் பதிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என தோன்றக்கூடிய விதத்தில் அவர்களது ரசிகர்கள் அவரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அண்ணா.. தலைவா.. நீ எப்ப வருவாய்.. என்ற கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள். 

இதனை அடுத்து விஜயின் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். எனவே சமீப காலமாக இந்த மக்கள் இயக்க நிர்வாகிகளோடு, இவர் அடிக்கடி சந்திப்புகளை மேற்கொண்டு வருவதால் விரைவில் அரசியலில் குதிக்கலாம் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் விஜயின் ஆசையை அதிகரிக்க கூடிய வகையில் ரசிகர்கள் அரசியல் வாசகங்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டி தமிழக அரசியலையே புரட்டிப் போடும் வகையில் நாளைய முதல்வர் ஆக அண்ணன் விஜய்யை பார்க்கிறார்கள். 

இதனை அடுத்து சமீபத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் ஒரு பக்கம் எம்ஜிஆர், மறுபக்கம் அண்ணாவை வைத்து அடுத்த சிஎம் விஜய் தான் என்று சொல்லுவது போல இருந்த போஸ்டர்கள் மக்கள் மத்தியில் பலவிதமான எண்ணங்களை தூண்டி விட்டுள்ளது. 

மேலும் இந்த போஸ்டரை பார்த்து ப்ளூ சட்டை மாற நடிகர் விஜய் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார். லியோ படத்தில் ஆபாசமான வசனங்கள் உள்ளதாகவும், எதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காசுக்காக நடிக்கும் விஜய் வருங்கால முதல்வரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் எதிர்கால இளைஞர்களை சீரழிக்கும் பணியை சிறப்பாக செய்வதாகவும், சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்களின் மனதில் தேவையில்லாததை விதைப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.