இந்திய திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை தமன்னா. தமிழ் திரையுலகில் கல்லூரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.
அண்மைக்காலமாக சினிமாவில் பல புதிய வரவுகள் வந்து விட்டதின் காரணமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் வெப் தொடர்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இது மட்டுமல்லாமல் சினிமா வாய்ப்பை அதிகளவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படத்தில் காவலா படத்திற்கு மிகச் சிறப்பான முறையில் குத்தாட்டத்தை போட்டு ரசிகர்களை திணற வைத்து விட்டார்.
இதனை அடுத்து ஹிந்தியில் உருவாகி வரும் vedaa எனும் திரை படத்திலும், மலையாளத்தில் உருவாகி வரும் பாந்த்ரா எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.மேலும் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த நடிப்பை எவரும் மறக்க முடியாது என கூறலாம்.
இந்நிலையில் சினிமாவில் இவர் நடிக்க வருவதற்கு முன்பு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் வைரலாகி விட்டது.
இந்த புகைப்படங்களை அதிகளவு பார்த்து வரும் ரசிகர்கள் அட.. இது நம்ம தமன்னாவா? பார்க்க எவ்வளவு க்யூட்டா சிம்பிளா இருக்காங்க என்ற கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.
தோழிகளோடு அமர்ந்திருக்கும் இந்த போட்டோஸ் தான் தற்போது ரசிகர்களின் மனதை ஆளுகிறது.
உங்களுக்கும் எந்த புகைப்படம் பிடித்திருந்தால் பார்த்த உடனேயே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.