நவராத்திரி இந்தியா முழுவதும் கலை கட்டி வருகின்ற வேளையில் இயக்குனர் ஹரியின் மனைவி வீட்டில் வைத்திருக்கும் நவராத்திரி கொலுவினை பார்த்த அனைவரும் அசந்து விட்டார்கள்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் கோவில்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் கொலுவை கொண்டாடுவது பாரம்பரிய மரபாக உள்ளது.
இந்தக் கொலுவை தான் தற்போது நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகளாகிய ப்ரீத்தா தற்போது தனது வீட்டில் வைத்து தோழிகளோடு கொண்டாடி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரான ஹரியை திருமணம் செய்து கொண்டு தற்போது மூன்று பிள்ளைகளுக்கு தாயாராக இருக்கிறார்.
இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஸ்டுடியோ உள்ளது. இந்த நிலையில் தற்போது கொலுவுக்காக இவர் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கொலு மேடை மற்றும் சுவாமிகளின் புகைப்படங்களை எடுத்து தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
இவரைப் போலவே இவரது அக்காவும் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் கொலுவை சோசியல் மீடியாவில் வெளியிட, சோசியல் மீடியா முழுவதுமே இவர்களது குடும்பப் புகைப்படங்கள் அதிகளவு தற்போது வெளி வருகிறது.
தற்போது ஹரி, விஷாலின் 34 வது படத்தை இயக்கி வருவதோடு இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று விஷாலின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் தாமிரபரணி, பூஜை போன்ற வெற்றி படங்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்களும் இவர்கள் வீட்டு கொலுவினை பார்த்து ரசிக்க கூடிய வகையில் தான் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது என்று கூறலாம்.
சோசியல் மீடியாவில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய ஃபேமிலி புகைப்படங்களில் இந்த கொலு புகைப்படங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களது லைக்களை அள்ளிக் கொடுங்கள். ஆண்டவனின் அருளைப் பெறுங்கள்.