ஜெயிலர் சாதனையை சில்லு சில்லாக நொறுக்கிய லியோ..! - கொஞ்ச நேரத்தில தரமான சம்பவம்..!

 


ஏற்கனவே விஜய் நடித்த சில படங்கள் அவர்கள் ரசிகர்கள் எண்ணிய படி இல்லாத காரணத்தால் சிறந்த படங்களாகவும், வெற்றி படங்களாகவும் அவருக்கு அமையவில்லை. இதனை அடுத்து இவர் தற்போது நடித்து வரும் லியோ படமாவது ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு வெற்றி படமாக அமையும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் லியோ படத்தின் டிரைலர் வெளி வந்து பல்வேறு கருத்துக்களுக்கு ஆளாகி உள்ளது. இதனை அடுத்து ஜெயிலர் ட்ரைலர் எல்லாம் என்ன? தளபதியின் லியோ பண்ணிய சம்பவம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது என கூறலாம். 

லியோ படத்தின் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் வெளி வந்து சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்து விஜயின் தீவிர ரசிகர்களின் மன நிலையில் ஒரு ஆழ்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என கூறலாம். 

அது மட்டுமல்லாமல் விஜயின் தீவிர ரசிகர்கள் இந்த ட்ரையிலரை பார்த்து கொண்டாடி வரக்கூடிய சூழ்நிலையில் இந்த ட்ரைலர் ஆனது ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது என கூறலாம். விஜயின் லியோ பட ட்ரைலர் ஆனது வெளியான ஒரே நாளில் ஜெய்லர் பட ட்ரைலரை விட அதிக அளவு பார்க்கப்பட்டு ஜெய்லர் பட சாதனையை முறியடித்து உள்ளது. 

ஜெய்லர் படமானது அதன் ஷோகேஸ் ட்ரைலரில் தற்போது வரை மூன்று கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்துக்கு முன்பாகவே இந்த சாதனையை முறியடித்து விட்டது. 

இந்த கொண்டாட்டத்தை விஜயின் தீவிர ரசிகர்கள் மிக சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறார்கள். எனவே லியோ படம் கட்டாயம் ஒரு மாஸ் வெற்றியை விஜய்க்கு பெற்றுத்தரும். அத்தோடு ஒரு கம்பேக் படமாக அமையும் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.