காமெடி நடிகர்கள் என்றாலே கவுண்டமணி, செந்தில், வடிவேலு என சொல்லக்கூடிய உங்களுக்கு வடிவேலுக்குப்பின் வந்த சந்தானத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. டைமிங்கில் ரைமிங் வார்த்தைகளை போட்டு காமெடி செய்வதில் வல்லவரான சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து பல படங்கள் நடித்திருக்கிறார்.
காமெடி நடிகனாக இருந்து கதாநாயக அந்தஸ்தை பெற்றிருக்கக் கூடிய இவர் பெருவாரியான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
சமீபகாலமாக இவரது படங்கள் ஏதும் இல்லை என்று கவலைப்பட்ட இவரது ரசிகர்களுக்கு தற்போது பட்டாசு வெடியை வைக்க கூடிய வகையில் செய்தி ஒன்று வந்துள்ளது.
அது சந்தானத்தின் புதிய பட வாய்ப்பு தான்.
இந்தப் படத்தை வெள்ளைக்கார துரை, தங்க மகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இந்த புதிய படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியா லயா அறிமுகம் ஆகிறார். நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்த கமர்சியல் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஆனந்த் நாராயணன் இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை, வசனம் போன்றவற்றை எழுச்சூர் அரவிந்த் எழுத படத்தின் முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கான பாடல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் எழுதி இருக்க டி இமான் இசையமைக்கிறார். எனவே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும்.
எப்போதும் போல இந்த படத்திலும் நடிகர் சந்தானம் காமெடி மற்றும் ஹீரோ ரோலில் கலக்கி விடுவார் இந்த படம் அவருக்கு வெற்றி படமாக மாறுமா? இல்லையா? என்பதை இனிவரும் நாட்களில் தான் தெரியவரும்.