எப்படி இருந்த இவர் எப்படி மாறினார் என்று பலரையும் புலம்ப வைத்து விட்டார் வடிவேல். இவரின் காமெடிகளை பார்த்து சிரிக்காதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டென்ஷன் போக வடிவேலின் காமெடிகளை பார்த்து ரசிப்பது வழக்கம்.
எனினும் திரை துறையில் இவர் மீது சுமத்தப்படாத குற்றச்சாட்டுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு இவரோடு நடித்த நடிகைகள் முதல் நடிகர்கள் வரை இவரது பல விஷயங்களை அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
பல பேரின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகி இருக்கக்கூடிய காமெடி நடிகர் வடிவேலு தற்போது கொடுத்திருக்கும் ரீஎன்ட்ரி மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்ற கருத்து இப்போது பரவலாக உள்ளது.
இதற்குக் காரணம் ஷங்கர், சிம்பு தேவன் போன்றோர் வைத்த சாபம் தான் அவருடைய அழிவுக்கு காரணம் என்று ஒரு சில கூறி இருக்கிறார்கள். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை தொடங்க முயற்சி செய்தபோது வடிவேலு ஏகப்பட்ட பிரச்சனைகளை கிளப்பியதில் இருந்தே அவரது அழிவு ஆரம்பித்துவிட்டது என கூறலாம்.
இவர் ரீ என்ட்ரி கொடுத்து நடித்த மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களிலும் இவர் பழைய இடத்தை தக்க வைத்துக் கொண்டாரா? என்றால் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு தான் இவரது நடிப்பு இருந்துள்ளதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.
சந்திரமுகி 1 வடிவேலு கொடுத்த நகைச்சுவை சந்திரமுகி 2 இல்லை வடிவேலுவை பார்க்க பல ரசிகர்கள் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்த்தவர்களை ஏமாற்றி விட்டது எனக் கூறலாம்.
காமெடி என்ற பெயரில் எதை வெளியிடுகிறார் என்று தெரியாமல் இவர் நடிப்பு தொடர்ந்து இது போலவே இருந்தால் இவரது பருப்பு வேகாது என்று சொல்லலாம்.
எனவே ஓவராக தலை கனத்தோடு ஆடிய வடிவேலுவின் நிலைமை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
செகண்ட் இன்னிங்ஸில் ஆட்டம் இழந்து விடுவார்.எனவே இவரின் கனவு பொய்த்து விடும் என்ற செய்திகள் வடிவேடுவை கடுப்படையச் செய்துள்ளது.