கமலின் பெயருக்கு பின் இருக்கும் "ஹாசன்" அர்த்தம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

 



உலக நாயகன் கமலஹாசனின் பெயரின் பின் இருக்கும் ஹாசன் என்ற பெயர் யாருடையது என தெரிந்து கொள்ள வேண்டுமா? கமலின் பெயருக்கு பின் இருக்கும் இந்த ஹாசன் என்ற பெயர் கமலுக்கு மட்டும் இன்றி அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைத்து நபர்களின் பெயரின் பின்னால் இருப்பதற்கு காரணம் என்ன? என இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 

 இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களின் கமலஹாசனுக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது என கூறலாம். களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்த இவரது பயணம் இந்தியன் 2 வரை நீண்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பல படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கக் கூடிய கமலஹாசன் கல்கி, KH 233, KH 234 என படு பிஸியாக இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்ட சோவான பிக் பாஸ் 7 சீசனைத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றிருக்கும் கமலஹாசன் இவரது பெயரில் ஹாசன் என்பது எதைக் குறிக்கிறது என்று இன்று வரை இவரது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது. 

 இந்தப் புதிரை தற்போது விடுவிக்க கூடிய வகையில் எதற்காக இந்த ஹாசன் என்ற பெயர் அவர் குடும்ப நபர்கள் முழுவதும் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். சிலர் ரசிகர்கள் இவரை கமால் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயரைத்தான் இப்படி மாற்றிவிட்டாரோ என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. 

இவர் குடும்பத்தை பொறுத்தவரை சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் என பெயர்கள் அமைந்திருக்கும். கடவுள் நம்பிக்கை இல்லாத இவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இவரது தந்தையான ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவரின் இஸ்லாமிய நண்பர் தான் இதற்கு காரணம் என இவரது அண்ணன் சாருஹாசன் கூறி இருக்கிறார். 

இந்து, முஸ்லீம் ஒற்றுமையை அதிகம் விரும்பக்கூடிய இவரது தந்தை தனது நண்பர் பெயரை மூன்று மகன்களுக்கும் சூட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நண்பர் தான் இவரது குடும்பத்திற்கு மிகச்சிறந்த குருவாக இவரது அப்பாவை வழி நடத்திச் சென்றாராம். 

 எனவே தான் தனது மகன்களுக்கு, தனது நண்பரும், குருவமான ஹாசனின் பெயரை 1931 ஆம் ஆண்டு முதலில் பிறந்த மகன் சாருஹாசனுக்கும் அடுத்தடுத்த பிறந்த இரண்டு மகன்களுக்கும் சூட்டி இருக்கிறார். இதனை அடுத்து ஹாசன் என்ற பெயரானது இவர்களது ஃபேமிலி பெயராக மாறிவிட்டது. 

ஆண்களுக்கு மட்டுமல்லாமல் சுகாசினி அனுஹாசன் என பெண்களின் பெயருக்கு பின்னாலும் இந்த குடும்ப நண்பரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பரின் பெயரை தான் தனது குடும்பப் பெயராக இன்று வரை கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.