சினிமா துறையை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை சினிமா துவங்கிய காலத்தில் இருந்தே உள்ளது என்றுதான் கூற வேண்டும். எனினும் அந்த காலத்தில் அதிகளவு சமூக மீடியாக்கள் வளர்ச்சி அடையாத நிலையில் அது பற்றி அதிகம் நமக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றோ ஊடகத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதால், இது குறித்த செய்திகள் விரைவாக மக்கள் மத்தியில் பரவி விடுகிறது என்று கூறலாம்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்த நடிகை கிரண், ஜெமினி திரைப்படத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.
அதிலும் குறிப்பாக ஓ போடு பாடலில் இவரது ஆட்டத்தை இன்று வரை யாரும் மறக்கவில்லை என்று கூறலாம்.
இதனை அடுத்து இவருக்கு பல படங்கள் வந்து சேர்ந்தது அந்த வகையில் இவர் பிரசாந்த், அஜித், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் பட வாய்ப்புகள் குறைவான போது இவர் கிளாமர் நடனங்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக இவர் போட்ட குத்தாட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் விஜயோடு இணைந்து போட்ட குத்தாடம் மிகவும் பிரபலமானவை.
இந்நிலையில் இவர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த கருத்துக்கள் இப்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது எனக் கூறலாம்.
திரை உலகுக்கு வந்த புதிதில் ஸ்லிம்மாக இருந்த கிரண் இடையில் குண்டாக மாறிவிட திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தனக்கு கிடைத்த கேரக்டர்களில் எல்லாம் நடித்து வந்தார். தற்போது அதிக பட வாய்ப்புகள் இல்லை எனவே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அத்தரி, புத்திரி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. மேலும் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களிடையே பேசியும் அபரிமிதமான பணத்தை இவர் சம்பாதித்து வருகிறார்.
தென்னிந்திய படங்களில் நடித்த பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு நடிக்க போக அங்கும் இவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் தான் சிலர் இவரிடம் அவர்களது சுய ரூபத்தை காட்டியதாகவும், சர்வசாதாரணமாக தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி இருப்பதாகவும் மன வருத்தத்தோடு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதனை அடுத்து திரை துறையில் முன்னணியில் இருந்த நடிகை கிரண் உடன் அட்ரஸ்மெண்ட் பேசியவர்கள் யார், யார் என்பதை வெளிப்படையாக கூறாமல், இலை மறைவு காய் மறைவாக அது உள்ளது உண்மைதான் தன்னிடமும் அப்படி நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறியது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.