தமிழ் திரை உலகில் "தடம்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் தன்யா ஹோப். இவர் நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக "கிக்" என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக "தாராள பிரபு" படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பல பட வாய்ப்புகள் வந்த போதும் இவரது பெயரை சொல்லக்கூடிய வகையில் அந்த படங்களில் இவர் நடித்த கேரக்டர் மக்கள் மனதை ஏற்க வில்லை என கூறலாம்.
இந்த சூழ்நிலையில் இவரது நடிப்பில் தற்போது "வெப்பன்" என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த தன்யா இப்போது வெப் தொடரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இவர் நடிக்கக்கூடிய தொடரின் பெயர் 'லேபிள்' என்பதாகும் இந்த வெப் தொடரில் இவருக்கு ஜோடியாக ஜெய் நடித்ததுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வெப் தொடரை அருண் ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருக்கிறார்.
மேலும் இந்த வெப் தொடரில் மகேந்திரன், ஹரிசங்கர், நாராயணன், சரண்ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இந்த வெப் தொடரை காணக்கூடிய ஆவலில் இருக்கிறார்கள். இந்த வெப் தொடராவது இவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்குமா? என்பது இனிவரும் நாட்களில் தான். எனவே நீங்களும் இந்த வெப் தொடரை பார்த்து விட்டு அவரது நடிப்பு எப்படி இருந்தது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.