பெரிய திரையில் நடித்த நடிகைகள் தங்களுக்கு பாட வாய்ப்புகள் குறை கூடிய சமயத்தில் சின்னத்திரைக்கு தாவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே சின்னத்திரையில் நடிக்க கூடிய நடிகைகளின் நடிப்புத்தன்மையை பார்த்து அவர் அவர்களுக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் வந்து குவிகிறது.
அதுபோல வெள்ளித்திரையில் கலக்கிய நடிகையான அக்ஷயா ராவ் தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என கூறலாம்.
இவர் நடிகர் ஆர்யா ரேணுகா மேனன் நடிப்பில் இயக்குனர் இகோர் இயக்கத்தில் வெளிவந்த கலாபக் காதலன் என்ற திரைப்படத்தில் 2006 ஆம் ஆண்டு அந்த கதாநாயகியின் தங்கையாக நடித்து அசத்தியவர்.
ஆர்யாவின் ரீல் மச்சினியாக நடித்த இவர் அந்த கேரக்டர் ரோலில் ஒரு முரட்டு பெண்ணாக நடித்து அசத்தி பலரது மனங்களிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இவர் கடைசியில் யார் என்ற திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தியா ராகம் என்ற சீரியலில் மிக முக்கியமான ரோலில் இவர் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவரைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு அழகிய பதுமை போல இருக்கிறார். இவரது அழகை இதுவரை இப்படி பார்த்ததில்லை என்று இவரை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் எந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கூறலாம்.