தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரக்கூடிய இந்த சிறு வயது சிறுவனின் புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்பது உங்களுக்கு தெரிகிறதா? இந்தப் புகைப்படமானது தற்போது திரையுலக நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகரின் சிறு வயது போட்டோ தான்.
இந்த நடிகர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
மேலும் தான் நடித்த ஒரு படத்தின் மூலமே பேன் இந்திய ஸ்டார் ஆக மாறி இருக்கும் இவருக்கு ரசிகர்கள் படை அதிகளவு உள்ளது.
மேலும் இவரது நடிப்பை திரைப்படங்களில் காணுவதற்கு என்று ரசிகர்கள் எப்போதும் ஆவலோடு காத்திருப்பார்கள்.
இப்போது அந்த நடிகர் யார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அப்படி உங்களால் யோசிக்க முடியவில்லை என்றால் ஒரு சிறு குறிப்பை நான் உங்களுக்கு தருகிறேன்.
இவர் தனக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இப்போதாவது உங்களுக்கு அந்த நடிகர் யார் என்று கண்டுபிடித்தீர்களா? உங்கள் யூகம் சரி தான் இவர் வேறு யாரும் இல்லை.
புஷ்பா @ புஷ்பராஜ் என ரசிகர்களால் மாஸாக அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுன் தான்.
அல்லு அர்ஜுன் தெலுங்கு மொழி திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் விளம்பர நடிகராகவும் நடன கலைஞராகவும் இயக்குனராகவும் திகழ்கிறார்.
சுமார் 20 மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை நந்தி விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்திருக்கிறார்.
அல்லு அர்ஜுன் சிறுவயதில் இருக்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நடிப்பில் அடுத்த வருடம் கட்டாயம் புஷ்பா இரண்டு வெளிவரும் என்று ஆவலுடன் இவரது ரசிகர்கள் காத்து வரும் வேளையில் இது போன்ற புகைப்படம் வெளிவந்து அவர்களை குஷிப்படுத்தி உள்ளது என கூறலாம்.