80 மற்றும் 90-களில் மிகச்சிறந்த கதாநாயகனாக வலம் வந்த நடிகர் ராமராஜன் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இவர் நடிப்பில் வெளி வந்த கரகாட்டக்காரன் திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் வசூலில் சாதனை புரிந்தது.
அரை ட்ரவுசர் போட்டுக்கொண்டு சினிமாவில் இவர் எப்படி வெற்றி பெறுவார் என்று நினைத்தவர்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில், இவரது ஒவ்வொரு படமும் பட்டி தொட்டி எங்கும் பார்க்கப்பட்டு பாடல்களும் பிரபலமானது.
பல வருடங்களுக்குப் பிறகு இவர் திரைத்துறைக்கு வந்து தனது அனுபவங்களை பல்வேறு வகையில் பகிர்ந்து வரக்கூடிய வேளையில் தன் மனம் கவர்ந்த நடிகையைப் பற்றி தற்போது வெளிப்படையாக பேசிய விஷயம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
அந்த வகையில் அண்மைக்காலமாக இளம் நடிகை ஒருவர் இவர் மனதை கவர்ந்த நடிகை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த நடிகை யார் என்று கேள்விக்கு தற்போது பதில் அளித்து இருக்கக்கூடிய இவர் தன் மனம் கவர்ந்த நடிகையாக கீர்த்தி சுரேஷை கூறியிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் திரை உலகில் நடித்து வந்த சரோஜாதேவி, சாவித்திரி, கே ஆர் விஜயா போன்ற நடிகைகள் தனக்கு பிடித்த வேளையில் தற்போது நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது மனதில் நிற்கிறார் எனக் கூறியிருக்கிறார்.