இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு தெரிஞ்சா.. ஆச்சரியப்படுவீங்க..!




பாகுபலி திரைப்படத்தில் தேவசேனாவாக நடித்து இளைஞர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

உடல் எடை அதிகரித்ததின் காரணத்தால் அண்மைக்காலமாக இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளது. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

குறிப்பாக தமிழ் திரையுலகில் இவர் 2006 ஆம் ஆண்டில் இரண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சியை திரைப்படங்களில் அதிகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

அருந்ததி திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இவருக்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக்கூடிய அனுஷ்கா நந்தி விருதையும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றவர். 

 இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைதளங்களில் அதிக அளவு புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவருக்கு இந்த ஆண்டு Miss Shetty Mr Polishetty என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் நடித்து அந்த படமும் வெளிவந்தது. 

மேலும் மலையாள படம் ஒன்றில் நடிப்பதற்கு கம்மிட் ஆகியிருக்கக்கூடிய இவரின் சிறு வயது போட்டோ ஒன்றுதான் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். 


அந்த அளவுக்கு அழகான தோற்றத்தோடு அனுஷ்கா காட்சியளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவில் இருப்பது அனுஷ்கா என்பதை எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவு அவரது தோற்றம் இருப்பதால் ரசிகர்கள் வியப்பாக அந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் போட்டோக்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக இணைந்து விட்டதால், ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த போட்டோவை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பார்த்து வருகிறார்கள்.