வாய்ப்பு கிடைக்கல.. லிவிங்க்ஸ்டன் செய்யும் விஷப்பரிட்சை..! - இதெல்லாம் தேவையா…?

 




தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர்களின் வரிசையில் சிலர் இருப்பார்கள். அந்த வகையில் ஆரம்ப காலத்தில் திரை உலகில் பல கஷ்டங்களை சந்தித்து இருந்தாலும், இன்று மக்களால் ரசிக்கப்படக்கூடிய நடிகர்களின் ஒருவராக லிவிங் ஸ்டன் இருக்கிறார். 

தமிழ் திரை உலகில் இவர் பாக்கியராஜ் இடம் உதவியாளராக இருந்து அதன் பின் சினிமாவுக்குள் நுழைந்தவர். பல ஆசை கனவுகளோடு, சினிமாக்கள் நுழைந்த இவருக்கு பல தடைகளும் போராட்டங்களும் ஏற்பட்டது. 

எனினும் அவற்றையெல்லாம் சுமையாக கருதாமல் கடுமையான முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார். மிகச் சிறந்த திறமையாளரான இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தனது கேரியரை ஆரம்பித்து நகைச்சுவை கலந்த வில்லத்தனம் பண்ணுவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். 

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கக்கூடிய இவர் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் இவர் ஹீரோவான சுந்தர புருஷன் படத்தில் ரம்பாவுக்கு ஜோடி சேர்ந்து நடித்து தனது கெத்தான நடிப்பை வெளிப்படுத்தி குணச்சித்திர கதாநாயகன் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். 

வில்லன், குணச்சித்திர நடிகர், கதாநாயகன், காமெடியன் என பல வகைகளில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவரும் தற்போது சன் டிவி சீரியல்களில் லீடிங் ரோலை செய்து வருகிறார். 

இதனை அடுத்து சமீபத்தில் நிருபர் ஒருவர் எங்களுக்கு இருக்கின்ற ஒரே வருத்தம் சமீபகாலமாக பல படங்களில் உங்களை பார்க்க முடியவில்லை, அதற்கு காரணம் என்ன என்று கேட்ட போது எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை என பளிச்சென்று கூறிவிட்டார். 

அதுமட்டுமல்லாமல் தற்போது சினிமா துறையானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நல்ல கதைகள் வந்தால் அதற்கு பாராட்டு கிடைக்கும் அதுவே காசுக்காக கதை என்றால் அது ஓடாது என்று கூறிவிட்டார். 

அதற்கு உதாரணமாக இருட்டறையில் முரட்டு குத்து என்ற படத்தைக் கூறி அந்த படம் ஓடலையா? வல்கரான படம்.. வல்கராக இருந்தா என்ன? அந்த படத்தை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் நானும் அது போல ஒரு படம் எடுக்கப் போகிறேன் என கூறிவிட்டார்.