அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால்.. ஓகே சொல்வேன். ஆனால்... - நடிகை பாப்ரி கோஷ் ஷாக் டாக்..!

 

சீரியல்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்து வரும் பாப்ரி கோஸ் தமிழில் சில படங்களில் நடித்து தனக்கு என்று ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர். குறிப்பாக இவர் தளபதி விஜய் தந்தை இயக்கிய டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

அதன் பிறகு இவருக்கு பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தற்போது சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். 

இந்த பேட்டியின் போது பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு நேர்த்தியான முறையில் பதில் அளித்து இருக்கக்கூடிய இவர் பட வாய்ப்புக்காக உங்களை படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சற்றும் தவறாமல் பதில் அளித்து இருக்கிற விதத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். 

 இந்த கேள்விக்கு சாதுரியமான பதிலை அளித்திருக்கும் அவர் அப்படி அழைத்தால் நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்வேன். ஆனால் ஒரு சின்ன வேண்டுகோளை அந்த இடத்தில் விதிப்பேன். 

 அது என்னவெனில் அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அதற்கு ஓகே என அந்த இடத்தில் சொல்லாமல் அவருடைய வீடு எங்கிருக்கிறது, அவரது குடும்ப நபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்று அவருடைய உறவினர்கள் மத்தியில் சார் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வந்தால் பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினீர்களே, நான் தயார் என்று அனைவரின் முன்னிலும் முத்தம் கொடுத்து விடுவேன் என அதிரக்கூடிய பதிலை தந்து அனைவரையும் திக்கு முக்காட வைத்து விட்டார். 

வேறு சில நடிகைகள் என்றால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று நழுவி விடுவேன் என்று உடனடியாக பதில் அளித்து விடுவார்கள். ஆனால் வித்தியாசமான தனது சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. 

மேலும் தற்போது இவரது பேச்சானது இணையத்தில் வைரலாகி வருவதாகவும் இளைஞர்கள் இது போன்ற தைரியத்தை பலரும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுக்கவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.