தென்னிந்திய மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து தற்போது ஹிந்தி படத்தில் நடித்து பேன் இந்திய நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை சமந்தா. அண்மையில் இவர் விஜய தேவர் கொண்டவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர் நடிப்பு மெச்சும்படி இருந்தது. மேலும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகனாகிய நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எனினும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று நடிப்பதில் முழுமூச்சாக இருந்த இவருக்கு மர்ம நோயான மயோசிடிஸ் ஏற்பட்டு, அதிலிருந்து வெளிவருவதற்கு கடுமையான முயற்சிகளை செய்து வருவதோடு வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவமும் பார்த்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவரை சந்தித்தபோது அவரிடம் சமந்தா நடந்து கொண்ட விதம் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இவர் மும்பை ரெஸ்டாரன்ட் ஒன்றுக்கு சென்று விட்டு வெளியே வரும் சமயத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவிற்காக காத்து நின்றிருக்கிறார்.
சமந்தா வெளியே வந்தவுடன் அந்த ரசிகர் சமந்தா விடம் சென்று இன்று எனக்கு பிறந்தநாள் உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு நடிகை சமந்தா உனக்கு எந்த நாளும் பிறந்தநாள் தான் என ரசிகரை கலாய்த்து தள்ளிவிட்டு அவரோடு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
எந்தவித பந்தாவும் இல்லாமல் சமந்தா செய்திருக்கும் இந்த சம்பவம், ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்படக்கூடிய வகையில் உள்ளது என கூறலாம்.
உங்களுக்கும் எந்த பதிவு பிடித்திருந்தால் உடனடியாக நீங்கள் எந்த பதிவிற்கு உரிய லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் போட்டு எங்களுக்கு உங்களது மேலான ஆதரவை கொடுங்கள்.