இன்று இருக்கும் பெண்கள் அனைவரும் சீரியல் களில் அதிகமாக பொழுதை தள்ளுகிறார்கள் என்பது மிக நன்றாக தெரியும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக மாறியவர் தான் ரச்சிதா மகாலட்சுமி.
ரச்சிதா மகாலட்சுமியின் நடிப்பை பார்ப்பதற்கு என்று பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு இளைஞர் கூட்டம் காத்திருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது நடிப்புத் திறனாலும், அழகாலும் அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.
இவரும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் பெருவாரியான ரசிகர்கள் இவருக்கு என்று இருக்கிறார்கள். மேலும் இந்த போட்டியில் அவர் இறுதிச் சுற்று வரை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது பாடி ஸ்ட்ரக்சர் இப்படி இருப்பதில் ரகசியம் என்ன என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்.
அந்த வகையில் இவர் கூறிய விஷயமானது சிலருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும்.எனவே ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதை உணர்ந்து தான் அவரும் தன் உடல் எடையை மட்டுமல்லாமல் அழகையும் சிறப்பான முறையில் பராமரிப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் தனது உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால், கடுமையான கட்டுப்பாடுகளை அவருக்குள் வகுத்து செயல்படுவதாக கூறியிருக்கிறார்.
இந்த காரணத்தால் இவரது உடம்பு இன்றுவரை கட்டுக்கோப்பாக இருப்பதாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.
இனி அனைவரும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எப்போதும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எந்த கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களது மேலான ஆதரவை தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.