பயில்வான் ரங்கநாதன் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய கருத்துக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் தரமான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
எப்போதுமே பலரை சீண்டி கேலியும், கிண்டலுமாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மற்றும் நடிகர் தினேஷ் பற்றி தாறுமாறான கருத்துக்களை பதிவு செய்ததற்கு நடிகர் தினேஷ் பல கேள்விகளைக் கேட்டு தன்னுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் ஆன நிலையில் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் பிரிந்து வாழ்கிறார்கள்.
இதனை அடுத்து அண்மையில் தனது கணவர் டார்ச்சர் செய்வதாக தினேஷ் மீது புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து விட்டார்கள்.
இந்த நிலையில் ஒரு மூன்றாவது நபரால்தான் ரச்சிதா தவறான பாதைக்கு செல்கிறார் என ஒரு பேட்டியில் பல ஆதாரத்தை காட்டினார் தினேஷ்.
இதையெல்லாம் பேசி முடிவுக்கு கொண்டு வந்த நிலையில் மீண்டும் இந்த பிரச்சனையை பெரிதாக்கக்கூடிய வகையில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல பயில்வானின் பேச்சு சர்ச்சையை கிளப்பி விட்டது.
பயில்வான் தினேஷ் தினமும் குடித்துவிட்டு ரச்சிதாவை டார்ச்சர் செய்ததாகவும், அதனால் தான் ரச்சிதா அவரை விட்டு ஓடி விட்டார் என கூறியதோடு மட்டுமல்லாமல் பல பெண்களோடு தினேஷ் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.
இதனை அடுத்து தினேஷ் நான் குடித்துக் கொண்டிருக்கும் போது நீ பக்கத்தில் இருந்து பார்த்தையா.. பெண்களோடு சுற்றுவதை நீ பார்த்தயா.. பணத்துக்காக இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசக்கூடாது என்று சரமாரியாக பதிலடி தந்திருக்கிறார்.
இனி இது போல் பயில்வான் பேசும் பட்சத்தில் எந்த மாதிரியான அடி கொடுக்கணுமோ, அத தரமாக கொடுப்பேன் என ஆத்திரத்தோடு தினேஷ் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எனவே இனி மேல் தினேஷ் விஷயத்தில் பயில்வான் ஜாக்கிரதையாக வார்த்தைகளை பிரயோகம் செய்வாரா? இல்லை இந்த பேச்சு வார்த்தை முற்றும் நிலைக்குத் தெரியுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.