1994 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளி வந்த வீட்டில விசேஷங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை தான் பிரகதி.
தனது முதல் படத்தில் அதுவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத பாக்கியராஜோடு இணைந்து நடித்த இவர் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட நடிகைகளின் ஒருவர் என கூறலாம். இந்த படத்தை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
எனவே தமிழில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகில் ஹீரோயினியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது சீரியல்களில் களை கட்டி நடித்து வருகிறார்.
சொந்த வாழ்க்கையில் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி இருக்கக்கூடிய இவர் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இதனை அடுத்து இவர் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதின் காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.
கணவனோடு பிரிந்து வந்த இவர் தன் தாயாரின் வீட்டில் வசித்து வரும் போது தன் தாய் இவரின் தன்மானத்தை தூண்டி விட, எஸ்டிடி பூத் முதல் சில கடைகளில் வேலை செய்த இவர் எதர்ச்சியாக மாடலிங் துறையில் நுழைந்து இருக்கிறார்.
இதனை அடுத்து படிப்படியாக முன்னேறிய இவர் கணவனை பிரிந்த பிறகு தன் குழந்தைகளை வளர்க்க பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார். தற்போது நடிப்பில் கலக்கி வரும் இவர் நடிப்பை தாண்டி வெயிட் லிப்டிங்கில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் சில பேட்டிகளில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை என்று கூறிய இவர் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.
அதுவும் தனது 47 வது வயதில் காதலுக்கு ஓகே சொன்ன நடிகையாக இவர் திகழ்வதால் விரைவில் அந்த பிரபலத்தோடு இவருக்கு இரண்டாவது திருமணம் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது செய்திகள் வெளி வந்து உள்ளது. இந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பது இவர்கள் திருமணம் நடந்தால் தெரியவரும்.