திருமணத்தை வெறுக்கும் சிம்பு..! - என்ன பண்ணியிருக்கார் பாருங்க..!

 


தமிழ் சினிமா துறையில் முன்னணி ஸ்டார் ஆக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிம்பு உலக நாயகன் கமலஹாசனை போலவே பல வகை திறமைகளோடு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். 

சினிமா துறையை பொறுத்தவரை இவருக்கு தெரியாத விஷயங்களில் இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்தையும் கற்றுக் கொண்டு, மிக நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளியிட்ட இவருக்கு மிக பெரிய அளவில் கெட்ட பெயர்கள் ஏற்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் வராமல் இருப்பது ,மது அருந்துவது, பெண்கள் விஷயத்தில் அப்படி, இப்படி என்று இருப்பது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது அதிக அளவு இருந்தது. இவரது வளர்ச்சிக்கு தடையாக அமைந்தது என கூறலாம். இந்நிலையில் இவர் மாநாடு படத்தில் சிறப்பான கம்பேக்கை கொடுத்தார். 

அது மட்டுமல்லாமல் வெந்து தணிந்தது காடு படம் இவருக்கு மீண்டும் ஒரு ரவுண்ட் வரக்கூடிய வாய்ப்பு கொடுத்தது. இதனை அடுத்து இவர் தனது தீய பழக்க வழக்கங்களை எல்லாம் தற்போது விட்டு, விட்டு குடிக்காமல் மிகச்சிறந்த மனிதராக சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

40 வயதை தொட்டுவிட்ட சிலம்பரசன் என்கிற சிம்புவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. நேற்று வரை பல நடிகைகளோடு மீட்டிங், டேட்டிங் என்று ஓவராய் ஆட்டம் போட்ட இவர் ஒரு பிளேபாய் போலவே சித்தரிக்கப்பட்டார். ஆனால் இவரிடம் பயங்கரமான மாற்றம் தற்போது தெரிவதாகவும், திருமணத்தைப் பற்றி கேட்டால் அமைதியாக இல்லை இப்போது வேண்டாம் என்று சொல்கிறாராம்.

 எனினும் இவரது பெற்றோர்கள் இவரை விடுவதாக இல்லை. இன்று வரை பெண் தேடும் படலம் நடந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் சிம்புவோ சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இருப்பதாகவும், ஒரு ஆன்மீகவாதியை போல அமைதியாக எல்லாவற்றிலும் செயல்படுவதாகவும் நம்ப தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு சிம்பு ரெட் கார்ட் போட்டுவிட்டார் என்று கோடம்பாக்க வட்டாரமே பேசி வருகிறது. இவர்களின் ரசிகர்களோ விரைவில் சிம்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.