திரை உலகில் இருக்கும் நடிகர்கள் மட்டுமல்லாமல் நடிகைகளும் அரசியலில் களம் கண்டு வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தமிழ் திரை உலகில் சூரியன் படத்தில் அபாரமாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரோஜா பற்றி அதிகம் பகிர வேண்டியது இல்லை.
தற்போது நடிகை ரோஜா ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக மக்களுக்கு பல வகைகளில் நன்மை செய்து கொண்டு வரும் வேளையில், தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி, அமைச்சரும், நடிகருமான ரோஜாவை கேவலமாக விமர்சித்து பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதை அடுத்து நடிகை ரோஜாவோடு இணைந்து நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ராதிகா ரோஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் பாரத பிரதமருக்கு, இது போன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படக்கூடிய கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வீடியோ வழியாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நமது நாட்டை பாரத நாடு என்று பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் பேசி வரக்கூடிய நாம் பெண்களுக்கு எதிராக குறிப்பாக குறிப்பாக ஒரு அமைச்சர் என்று கூடி எண்ணாமல் அவதூறு பேசியவர்களின் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அவர்கள் பகிர்ந்த வீடியோ தற்போது ரோஜாவிற்கு ஆதரவாக உள்ளது என கூறலாம்.
மேலும் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜாவை பற்றி பேசியது கண்டனத்திற்கு உரியது. இந்தியா ஐந்தாவது இடத்தில் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ள நிலையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற இது போன்ற நிகழ்வுகளை எவ்வளவு நாள் தாங்க முடியும்.
ஒரு அமைச்சருக்கே இந்த நிலை எனில் சாதாரண பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். எனவே உடனே பாரத பிரதமர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி யாரும் இந்தியாவில் பெண்களை மோசமாக பேசவோ, கீழ்த்தரமாக எண்ணவோ விடக்கூடாது.
எனவே பாரபட்சம் இன்றி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காகவும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்று ரம்யா கிருஷ்ணன் கூறி உள்ளது போலவே ராதிகாவும் ரோஜாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.
அந்த வகையில் ராதிகா கூறும் பொழுது ஒரு தோழியாக அரசியல்வாதியாக ரோஜாவின் தைரியம் தனக்கு மிகவும் பிடிக்கும்.
பெண்கள் அரசியலில் ஒரு அங்கமாக மாற வேண்டும். பாரத மாதாவாக நாம் பார்க்கப்படும் நாட்டில் தான் நடிகை ரோஜா மீது இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளது.
ஒரு அமைச்சரை பார்த்து ஆபாச படத்தில் நடித்தவர் என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. எனவே பாரதப் பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தக்க தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.