திருமணத்திற்கு பிறகும் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு..! - பிக்பாஸ் சம்யுக்தா-வின் பின்னணி..!

 


மாடலிங் துறையில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்திருந்த சம்யுக்தா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடைபெறும் மாஸ் ஹிட்டான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான செலிப்ரிட்டி லிஸ்டில் இணைந்தார். 

இந்த சூழ்நிலையில் இந்த ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகு இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு ரயான் என்ற மகனும் இருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். மேலும் இவர் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். 

இந்த பேட்டியில் இவர் கணவரை ஏன் பிரிந்தார் என்பதை குறித்து மனம் திறந்து பேசி இருப்பதைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் இவருக்கு தற்போது ஆறுதலை கூறி வருகிறார்கள். மேலும் இவர் கணவர் துபாயில் வேலை பார்த்திருந்தால் இவரும் அங்கு இருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அவர் வேறொரு பெண்ணோடு உறவில் இருக்கிறார். 

இந்த காரணத்தால் அவர் தன்னிடம் சரியாக பேச மாட்டார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை போட்டு உடைத்தார். தன் கணவர் ஒரு மற்றொரு பெண்ணோடு தொடர்பில் இருக்கக்கூடிய விஷயமே இவருக்கு நான்கு ஆண்டுகள் கழித்துதான் தெரிய வந்ததாம். 

இதனை அடுத்து இவர் மறக்க முடியாத வலிகளை சந்தித்து இருக்கிறார். இன்னும் அந்த சம்பவத்தை நினைக்கும் போது அவருக்கு மன வலி ஏற்படுவதாகவும் கூறுகிறார். பலமுறை பல வகைகளில் இந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் மேலும், மேலும் அந்த சம்பவம் அவர் மனநிலையை பாதிப்பதாகவும், குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தெரிவித்திருக்கக்கூடிய இவர் முறைப்படி விவாகரத்து கூட கொடுக்காமல் அவர் வேறு பெண்ணோடு வாழ்வது மனரீதியாக பலவித துன்பத்தை தனக்கு தந்திருப்பதாக கூறியிருக்கிறார். 

 அதிலும் குறிப்பாக தன் குழந்தை ரயான் என்ன தவறு செய்தான். அப்பா வேண்டும் என்று அவன் கேட்கும்போது மனசு மிகவும் கஷ்டமாக உள்ளது. வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை துணை அமைவது என்பது மிகவும் முக்கியம். அது தன் வாழ்க்கையில் நடக்கவில்லை என்பதை மனவருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

 இந்த மாதிரி சூழலில் நான் இருக்கும் போது தான் பாவனாவை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவருடைய மாமனார் மற்றும் மாமியார் என்னுடைய அப்பார்ட்மெண்ட் அருகில் தான் இருப்பதால் அடிக்கடி வந்து சென்றார். 

இதன் மூலம் எங்கள் நட்பு வளர்ந்தது. இதனை அடுத்து என் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட இவர் எனக்கு ஆறுதலாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள பரிந்துரையும் செய்தார். இதன் மூலம் என் வாழ்க்கை மாறியது இன்று சம்யுக்தா உலகிக்கே தெரியும் பெண்ணாக மாறியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.