அடேங்கப்பா.. இவ்வளவு பெரிய மனசா..? - வேதிகா பேச்சு..! - கடுப்பான ரசிகர்கள்..!.

 


தமிழ், தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா "மதராசி" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். முதல் படத்திலிருந்து அபார நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

அந்த வகையில் இவர் தமிழ் திரைப்படங்களான முனி, காளை, சக்கரகட்டி, காவியத்தலைவன், பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். 

திரைப்படங்களோடு நின்றுவிடாமல் வெப் தொடர்களிலும் நடித்து வரக்கூடிய வேதிகா, அண்மையில் அளித்திருக்கும் பேட்டி வேதிகாவிற்கு இவ்வளவு பெரிய மனசு உள்ளதா? என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. இவர் விலங்குகளை பாதுகாக்க கூடிய ப்ளூ கிராஸில் இருப்பார் போல தெரிகிறது. 

விலங்குகளின் நன்மைக்காக குரல் கொடுத்து வரும் இவர் அசைவம் சாப்பிடுவதில்லை என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மாட்டுப்பாலும் குடிப்பது இல்லையாம். 

இதற்கு காரணம் என்னவென்று கேட்டபோது கன்றுக்குட்டி குடிக்க வேண்டிய பாலை நாம் திருடி குடிப்பது போல் இருப்பதின் காரணத்தால் நான் பால் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று கூறிய பதிலை கேட்டு ரசிகர்கள் அனைவரும் கடுப்பாகி விட்டார்கள் எனக் கூறலாம். 

மேலும் இவர் தோல் செருப்பு அணிவதில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க கூடிய இவர் பெரிய படம், சிறிய படம் என்ற பட்ஜெட்டுகளை பார்க்காமல் கதையைக் கேட்டு உறுதி செய்த பிறகு நடிப்பதாக தெரிவித்திருக்கிறார். 

மேலும் தற்போது இவர் பேட்ட ராப் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து வருவதாகவும், முனி 3 என்ற பேய் படத்தில் நடித்து கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். தமிழ் படங்களில் இவர் நடித்த பரதேசி, காவியத்தலைவன், சிவலிங்கம் போன்ற படங்கள் இவருக்கு மிகவும் பிடித்தமான படங்கள் என்றும் அந்த படத்தில் இவர் செய்த கேரக்டர் ரோல் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது என்பதை தெரிவித்திருக்கிறார். 

இன்னைக்கு வேதிகாவின் இந்த கருத்து உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை எங்களுக்கு முடிந்தால் தெரியப்படுத்துங்கள். வண்ணத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.