சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ஆன ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு ட்ரெண்டிங் ஆன தம்பதிகளின் வரிசையில் முதல் இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு வருடமாகி கூட இவர்களது ட்ரெண்டிங் அப்படியே இருந்தது என்று கூறலாம்.
மகாலட்சுமியின் கணவரான ரவீந்தர் சந்திரசேகர் நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரித்து பிரபலமானவர். மேலும் பல வகையான பிசினஸ்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் சிலரை முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் ரூபாய் 16 கோடிக்கு மேல் பாலாஜி என்ற நபர் இவரிடம் முதலீடு செய்ததாகவும் அந்த தொகையை இவன் மோசடி செய்து விட்டதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ஜாமீன் கோரிய ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கு நீதிபதி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார் தாரருக்கு 2 கோடி திரும்ப வழங்கப்பட்டு விட்டது என்று கூறி இருக்கிறார்.
ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் பொய் என்றும் எந்த விதமான தொகையையும் அவர் திருப்பித் தரவில்லை என பதிலளித்திருக்கிறார்.
இதனை அடுத்து இந்த வழக்கை வரும் அக்டோபர் ஆறாம் தேதிக்கு தள்ளி வைத்து இருக்கிறார்கள்.
அது வரை தயாரிப்பாளர் சந்திரசேகர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
மகாலட்சுமியின் கணவருக்கா எந்த நிலைமை என்று ரசிகர்கள் பலரும் பலவாறு பேசி வருகிறார்கள்.