இயக்குனர் எஸ் ஜே சூர்யா பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் அஜித்தை வைத்து இயக்கிய வாலி திரைப்படம் மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட திரைப்படத்தில் ஒன்றாக இருந்ததோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை புரிந்து அஜித்தின் கேரியரை மாற்றி அமைத்தது என்று கூறலாம்.
திரைப்படத்தை இயக்குவதோடு நின்று விடாமல் திரைப்படங்களில் நடிப்பதையும் தற்போது செய்து வரும் எஸ் ஜே சூர்யா,? விஜய் படத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய மறுபக்கத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார்.
இவர் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு வில்லனாக நடித்து தனது அற்புத வில்லத்தனத்தை வெளிப்படுத்தியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இருவருக்கு பலத்த வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து எஸ் ஜே சூர்யாவுக்கு ஜிகர்தண்டா 2 படத்தில் லாரன்ஸ் உடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அந்தப் படத்திலும், இவர் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில் வில்லனாக தெரியாமல் மற்றொரு ஹீரோவாக ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள்.
தற்போது ஹீரோவுக்கு இணையாக பார்க்கப்படும் எஸ் ஜே சூர்யா ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருப்பார்.
இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.
அந்த ஆசை நடிகர் அஜித்தின் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதே.
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் ஆதித் இந்த ஆசையை நிறைவேற்றாமல் போய்விடுவாரா? ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தில் இருந்து ஆதிக்கும், எஸ்.ஜே சூர்யாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு நிலவி வரும் வேளையில் இது போன்ற ஆசையை அவர் வெளியிட்டு இருப்பது அடுத்த படத்தில் அஜித்தோடு வில்லனாக கைகோர்க்கத்தார் என்று திரை உலக வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது.
எனவே அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு பிறகு கட்டாயம் எஸ்.ஜே சூர்யா அவரோடு இணைந்து நடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்பதால் அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனரே அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆவலை ஏற்படுத்தியதோடு இவரது ஆசை கட்டாயம் நிறைவேற வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் கட்டாயம் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் உடனடியாக ஷேர் செய்யுங்கள்.