வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரசிகர்களுக்கு இனி சரவெடி கொண்டாட்டம் தான்.
இதற்கு காரணம் உலகநாயகன் கமலஹாசனோடு விக்ரம் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பகத் பாசில், ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் புது படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, "தலைவர் 170" என்று தற்காலிக தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், மஞ்சு வாரியார், ராணா டகுபதி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்க உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
மேலும் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகளை இந்த பாடல் குழு தொடர்ந்து வெளியிட்டு வருவதை அடுத்து "தலைவர் 170" திரைப்படத்தில் பகத் பாசில் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு பகத் பாசில் ரஜினியோடு இணைந்து நடித்திருப்பதை பட குழு போஸ்டரை அடித்து பகிர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எனவே "தலைவர் 170" மிகப்பெரிய சம்பவத்தை நிகழ்த்தும் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மிகச்சிறந்த ரசிகர்கள் பட்டாளத்தோடு களம் இறங்கப் போகும் இந்த "தலைவா 170" ரசிகர்களின் எண்ணத்தை ஏற்ப விருந்தாக அமையும் என்பதை இனிவரும் நாட்களில் நமக்கு தெரிய வரும்.