நவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் பலரும் அம்மனைப் போல வேடம் அணிந்து போட்டோ ஷூட் நடத்துவதை தற்போதும் பேசனாக மாற்றிவிட்டார்கள் என்று கூறலாம்.
அந்த வரிசையில் ரம்யா பாண்டியனை தொடர்ந்து ரோபோ சங்கர் மகளாகிய இந்திரஜா தற்போது இணையத்தில் போட்டு இருக்கும் போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் முன்னேறிய ரோபோ சங்கரின் மகள் வெள்ளி திரையில் நடித்திருக்கிறார்.
இந்திரஜா விஜய் நடிப்பில் வெளி வந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனை எடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் காட்டி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த குருமன் படத்தில் அதிதி சங்கரின் தோழியாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்திரஜா விரைவில் தனது முறை மாமனுடன் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்தி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
இந்நிலையில் இந்திரஜா சங்கர் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொல்கத்தா துர்கா தேவியை போல வேடம் அணிந்து அம்மனாக மாறி இருக்கும் போட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
அதுமட்டுமில்லாமல் துர்கா தேவி அசோகடன் போரிட்டு மகிசனை வதம் செய்த நாள் என்ற கேப்சனை கொடுத்து இந்த போட்டோவை வெளியிட்டதால் இந்த போட்டோவானது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கான போட்டோக்களில் ஒன்றாகி விட்டது.
பக்தி பரவசத்தை அள்ளித் தந்திருக்கும் இந்த போட்டோசை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து அம்மன் படத்தில் இருப்பதை விட இந்த அம்மன் அலங்காரம் தத்ரூபமாகவும் நேர்த்தியான முறையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ரீல்ஸ் வீடியோக்களையும் போட்டு ரசிகர்களை அசத்தி விடக்கூடிய தன்மை கொண்டவர்.
எனவே நீங்களும் இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது எளிதில் தெரிய வரும்.