கடந்த தீபாவளியன்று வெளி வந்த சிவகார்த்திகேயனின் படமான "பிரின்சஸ்" எதிர்பார்த்த வெற்றியை சிவகார்த்திகேயன் கொடுத்து விடாத நிலையில், தற்போது தீபாவளிக்கு வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்ட "அயலான்" திரைப்படம் வரும் 2024 பொங்கலுக்கு வெளியிடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் இந்த "அயலான்" படம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வருகிறது.
இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
பல சிக்கல்களுக்குப் பின்பு வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.
மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.
யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசை அமைத்து இருக்கிறார்.
அண்மை காலங்களாக ஏலியன்கள் பற்றி பலவிதமான கருத்துக்கள் வெளிவந்த உள்ள நிலையில், இந்தப் படத்தின் மையக்கருவாக ஏலியன்கள் உள்ளது என கூறலாம்.
எனவே ரசிகர்களின் மனதை கவரும் படி இந்த படம் இருக்கும் என்பதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை.
ஏலியன்கள் படம் என்பதால் படத்தை அதிக அக்கறையோடு வி எஃப்எக்ஸ் பிரமாண்டமாக உருவாக்கி இருக்கிறார்கள். இதனை நீங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கும் "அயலான்" பட டீசரில் பார்த்தாலே தெரிந்திருக்கும்.
இதுவரை எந்த தமிழ் படத்திலும் இடம் பிடிக்கதாத ஏலியன்கள் இருக்கும் வகையில் காட்சிகள் இருக்கும் மற்றும் ஏலியன்கள் நிமித்தமான படமாக இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக விரும்புவார்கள் வசூலை வாரிக் குவிக்கும் என கூறலாம்.
அப்படி பிஎஃப்எக்ஸ்-ல் ஏலியனை பிரம்மாண்டமாக காட்டு இருந்தாலும், அந்த ஏலியனாக நடிக்க உதவிய நடிகர் யார்? என்று இது வரை யாருக்கும் தெரியாது. அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன். இவர்தான் ஏலியனாக நடித்து இருக்கிறார்.
இப்போது இந்த செய்தி தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் வெங்கட் செங்குட்டுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் படித்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.