வாலியின் வரிகளை பாட முடியாமல் திணறி அழுத பாடகி ஜானகி..! - என்ன பாடல் தெரியுமா?

 


திரை உலகில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் கவிஞர் கண்ணதாசனை போல வாலியின் பாடல்கள் 2k கிட்ஸ் விரும்பி கேட்கும் பாடல்களாக இன்று வரை திகழ்கிறது. 

இவரது பாடல்களில் நவரசமும் கலந்து இருக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே இவரை வாலிபக் கவிஞர் என்று பலரும் அழைத்தார்கள். மேலும் வாலி 1978 ஆம் ஆண்டு வெளி வந்த அச்சாணி திரைப்படத்தில் பாடல்களை எழுதி இருந்தார். 

இந்த படத்திற்கான இசையை இசைஞானி இசை அமைக்க, முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்" என்ற பாடல் வரிகளை வாலி எழுதியிருக்க இந்த பாடலை பாடகி ஜானகி பாடியிருந்தார் என்ற விஷயம் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். 

மேலும் இந்தப் பாடல் உருவானபோது பல தடங்கல்களை சந்தித்ததாகவும், பிரசாந்த் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் ராஜாவால் காலையில் இந்த பாடலை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. 

அது மட்டுமல்லாமல் எந்த பாடலை மதியம் 2 மணிக்கு மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ சென்று ஒலி பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பாடகி ஜானகி "பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகனை தாலாட்டுது" என்ற வரியினை பாடும் போது பாட முடியாமல் அப்படியே நிறுத்திவிட்டார். 

இதனை எடுத்து சில மணி நேரங்கள் கழித்து அவரை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு இந்த பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்தப் பாடலை கேட்டு விட்டு இது மாதிரி பாடல் வேண்டும் என இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ராதாவிடம் அடம் பிடித்துள்ளார்.