தென்னிந்திய திரைப்படங்களில் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து தன்னாட்சி செய்து வரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
ஆரம்ப காலங்களில் கிடைத்த வேடங்களில் நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக மாறி பல முன்னணி ஹீரோக்களோடு நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் குணசித்திர நடிகையாக நடிக்கக்கூடிய இவர் அண்மையில் ராஜ மவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1 பாகுபலி 2 படங்களில் சிவகாமி கதாபாத்திரத்தில் ராஜ மாதாவாக தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் பெயரை பெற்றார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளில் நடுவராக கலக்கி வரும் இவர் இயக்குனர் கிருஷ்ண வம்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஹீரோவாக நடிக்கக்கூடிய வயதில் ஒரு மகனுக்கு தாயாக இருக்கும் இவர் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்ததை யாரும் எளிதில் மறக்க முடியாது.
இதனை அடுத்து மீண்டும் ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்து, தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர், 1995 ஆம் வருடம் அம்மன் திரைப்படத்தில் நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
மிகவும் நேர்மையான முறையில் அம்மன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் அதே சமயத்தில் சிரஞ்சீவியோடு படு கிளாமராக உடையை அணிந்து ஒரு படத்தில் நடித்திருக்க கூடிய விஷயத்தை அண்மையில் ஒரு ஊடகத்தில் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அம்மனாக நடிக்கும் போது அவர் அந்தப் படத்தில் நடித்த சமயம் அந்தப் படம் தான் இவர், அதீத கிளாமரை காட்டி நடித்ததாக கூறியிருப்பதோடு இந்த இரண்டு படமும் ஒரே சமயத்தில் தான் வெளிவந்தது. இது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது தான்.
அம்மனாக நான் நடித்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாம் கற்பூரம் காட்டி ஆராதனை செய்த ரசிகர்கள், கவர்ச்சிகரமாக நடித்த இந்த படத்தையும் விசில் அடித்துக் கொண்டாடினார்கள் என்ற உண்மையை போட்டு உடைத்தார்.