மும்பையை சேர்ந்த ஜோதிகா 1998 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆன இவர் தமிழ் திரையுலகில் 1999 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இந்தப் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சூர்யாவுக்கு ஜோடியாக வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும் இவர் அஜித்துக்கு ஜோடியாக முகவரி, விஜய்க்கு ஜோடியாக குஷி, அர்ஜுனுடன் ரிதம் போன்ற படங்களில் நடித்து தன் அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
ரசிகர்களால் அன்போடு ஜோ என்று அழைக்கப்படக்கூடிய இவர் சூர்யாவோடு காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து பேரழகன், மாயாவி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இதனை அடுத்து இவர்கள் இருவர் மீதும் கிசுகிசுக்கள் பெரிதாக வெளிவர ஆரம்பித்த சூழ்நிலையில் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்ததோடு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
இயல்பாகவே சூர்யா கூச்ச சுபம் நிறைந்தவர் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்நிலையில் இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்ற நிகழ்ச்சிகள் ஜோதிகா பேசியது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை சூர்யா சிறப்பாக தொகுத்து வழங்குவார் என்பதை எதிர்பார்க்காத ஜோதிகா மிகச்சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய சூரியாவை பார்த்து ஷாக் ஆகிவிட்டதோடு தான் மிகப்பெரிய தோனியின் ரசிகை இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு உங்களின் ரசிகையாக மாறிவிட்டேன்.
நீங்கள் டோனிக்கும் ஒரு படி மேலே என்று எமோஷனலாக வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிகழ்வு தான் தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது என கூறலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் இதனை படித்தவுடன் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் மேலான ஆதரவை கொடுங்கள்.