வாய்விட்டு சிரித்தால் நோய் விட்
டுப் போகும் என்று கூறுவார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் காமெடிகளுக்கு என்று சில நடிகர்கள் இருக்கிறார்கள், குறிப்பாக அவர்கள் அள்ளித்தரும் காமெடிகளை பார்த்து மனம் விட்டு சிரிக்க கூடிய நேயர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
திரைப்படத்திற்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு காமெடியன்களும் முக்கியம் அப்போது தான் அந்த திரைக்கதை சீரிய முறையில் நகர்ந்து செல்லும் போர் அடிக்காது.
இந்த பதிவில் காமெடி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக வைகைப்புயல் வடிவேலு இவர் பெயரையும், இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தால் சிரிக்காதவர்களே இல்லை என்று கூறலாம் இவரது சம்பளம் தற்போது 8 முதல் 10 லட்சம் வரை உள்ளது.
இதுவரை 700 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த மனோபாலா சிறந்த இயக்குனரும் கூட தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகளவு நடித்து இருக்கக்கூடிய இவர் 10 முதல் 15 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கிறார்.
ஆரம்ப நாட்களில் ரேடியோ ஜாக்கியியாக தனது ஊடகப் பணியை தொடங்கிய ஆர் கே பாலாஜி மிகச்சிறந்த கதாநாயகனாகவும், கிரிக்கெட் கமாண்டராகவும் தற்போது இருக்கிறார். எதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்திருக்கும் இவரது சம்பளம் 10 முதல் 15 லட்சம் ஆகும்.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களில் மக்களின் மனதை இடம் பிடித்த ரெடிங் கிங்ஸ்லி பேசுவதை பார்த்தாலே ரசிகர்கள் சிரித்து விடுவார்கள்.
இவர் ஒரு படத்திற்கு 15 முதல் 25 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
பரோட்டா சூரி பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. வருத்தப்படாத வாலிப சங்கத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் ஜில்லா, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்து தற்போது கதாநாயகன் என்ற அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். இவர் சுமார் 25 முதல் 40 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
லொள்ளு சபாவின் மூலம் ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த சந்தானம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஒரு கல் ஒரு கண்ணாடியில் இவரது காமெடி ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைத்தது. ஒரு திரைப்படத்திற்கு நாள் ஒன்றுக்கு 15 லட்சம் விகிதம் முழு படத்திற்கு 5 கோடி வரை வாங்கி இருக்கிறார்.
ட்ரெண்டிங்கில் இருக்கும் யோகி பாபு மான் கராத்தே, காக்கா முட்டை, படியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து பெருவாரியான நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கியவர் ஒரு நாளைக்கு 14 முதல் 15 லட்சம் வரை வாங்கும் இவர் ஒரு முழு படத்திற்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.